இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 1836 பணியிடங்கள்
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் (ஐ.ஓ.சி.எல்., ) 'அப்ரென்டிஸ்' பிரிவில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.காலியிடம்: டெக்னீசியன், கிராஜூவேட் & டிரேடு பதவியில் 'அப்ரென்டிஸ்' பிரிவில் 1836 இடங்கள் உள்ளன. இதில் தமிழகத்துக்கு 30 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி: பதவி வாரியாக ஐ.டி.ஐ., / டிப்ளமோ / டிகிரி என மாறுபடும்.வயது: 30.11.2023 அடிப்படையில் 18 - 24 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்கடைசிநாள்: 5.1.2024விபரங்களுக்கு: ioclmd.in