உள்ளூர் செய்திகள்

தேசிய தோட்டக்கலை வாரியத்தில் பணி

மத்திய அரசின் கீழ் செயல்படும் தேசிய தோட்டக்கலை வாரியத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிடம்: சீனியர் தோட்டக்கலை அதிகாரி 25, துணை இயக்குனர் 19 என மொத்தம் 44 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி: தோட்டக்கலை அதிகாரி பணிக்கு வேளாண்மை / தோட்டக்கலை / உணவு தொழில்நுட்பம் உள்ளிட்ட பிரிவுகளில் டிகிரி, இதனுடன் துணை இயக்குனர் பணிக்கு கூடுதலாக ஐந்தாண்டு பணி அனுபவம் தேவைப்படும்.வயது: 5.1.2024 அடிப்படையில் தோட்டக்கலை அதிகாரி 30, துணை இயக்குனர் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 500. மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் இல்லை.கடைசிநாள்: 5.1.2024விபரங்களுக்கு: exams.nta.ac.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !