நிலக்கரி நிறுவனத்தில் 632 அப்ரென்டிஸ் காலியிடங்கள்
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் 'அப்ரென்டிஸ்' பணிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.காலியிடம்: கிராஜூவேட் அப்ரென்டிஸ் பிரிவில் மெக்கானிக்கல் 75, எலக்ட்ரிக்கல் 78, சிவில் 27, இன்ஸ்ட்ரூமென்டேசன் 15, கெமிக்கல் 9, மைனிங் 44, கம்ப்யூட்டர் 47, எலக்ட்ரானிக்ஸ் 5, பார்மசி 14, டெக்னீசியன் பிரிவில் மெக்கானிக்கல் 95, எலக்ட்ரிக்கல் 94, சிவில் 49, இன்ஸ்ட்ரூமென்டேசன் 9, கெமிக்கல் 9, மைனிங் 25, கம்ப்யூட்டர் 38, எலக்ட்ரானிக்ஸ் 8 என மொத்தம் 632 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி: கிராஜூவேட் பிரிவுக்கு பி.இ., / பி.டெக்., டெக்னீசியன் பிரிவுக்கு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.ஸ்டைபண்டு: கிராஜூவேட் அப்ரென்டிஸ் ரூ. 15,028, டெக்னீசியன் அப்ரென்டிஸ் ரூ. 12,524தேர்ச்சி முறை: கல்வித்தகுதி மதிப்பெண், சான்றிதழ் சரிபார்ப்பு.விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.முகவரி:The General Manager, Learning and Development Centre, N.L.C India Limited. Neyveli - 607 803கடைசிநாள்: விண்ணப்பிக்க 31.1.2024, விண்ணப்பங்கள் சேர வேண்டிய நாள் 6.2.2024 மாலை 5:00 மணி.விபரங்களுக்கு: nlcindia.in