தெற்கு ரயில்வேயில் 2860 அப்ரென்டிஸ் காலியிடங்கள்
தெற்கு ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் 'அப்ரென்டிஸ்' காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.மெடிக்கல் லேப் டெக்னீசியன், பிட்டர், மெஷினிஸ்ட், வெல்டர், எலக்ட்ரீசியன், எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், கார்பென்டர், பிளம்பர் உள்ளிட்ட பிரிவுகளில் ரயில் பெட்டி தொழிற்சாலை, பெரம்பூர் 1357, பொன்மலை ரயில்வே தொழிற்சாலை, திருச்சி 679, சிக்னல், தொலைத்தொடர்பு தொழிற்சாலை, போத்தனுார் 824 என மொத்தம் 2860 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி: குறைந்தது 50 சதவீத மதிப்பெண்ணுடன் பிளஸ் 2, ஐ.டி.ஐ., முடித்திருக்க வேண்டும்.வயது: 15 -24 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்புவிண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100.பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி.,பிரிவினருக்கு கட்டணம் இல்லை.கடைசிநாள்: 28.2.2024 மாலை 5:00 மணி.விவரங்களுக்கு: sr.indianrailways.gov.in