இரும்பு உருக்காலையில் 314 காலியிடங்கள்
பொதுத்துறையை சேர்ந்த ஸ்டீல் அதாரிட்டி ஆப் இந்தியா (செயில்) நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.ஆப்பரேட்டர் டெக்னீசியன் (டிரைய்னி) பிரிவில் மெக்கானிக்கல் 100, எலக்ட்ரிக்கல் 64, மெட்டலர்ஜி 57, இன்ஸ்ட்ருமென்டேசன் 39, சிவில் 18, கெமிக்கல் 18, ஐ.டி., 20, எலக்ட்ரானிக்ஸ் 8, செராமிக் 6 உட்பட 314 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி: தொடர்புடைய பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.வயது: 18.3.2024 அடிப்படையில் 18 - 28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, ஸ்கில் தேர்வுவிண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 200கடைசிநாள்: 18.3.2024விவரங்களுக்கு: sailcareers.com