உள்ளூர் செய்திகள்

இன்ஜினியரிங் முடித்தவருக்கு மின்சார நிறுவனத்தில் வேலை

மத்திய அரசின் கீழ் செயல்படும் தேசிய அனல் மின்சார நிறுவனத்தில் (என்.டி.பி.சி.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.சிவில் 20, எலக்ட்ரிக்கல் 29, மெக்கானிக்கல் 9, எச்.ஆர்., 1, பைனான்ஸ் 1, ஐ.டி., 1, கார்பரேட் கம்யூனிகேசன் 1, சி.டி.எம்., 1 என மொத்தம் 63 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி: இன்ஜினியரிங் பிரிவுகளுக்கு பி.இ., / பி.டெக்., மற்ற பணிக்கு தொடர்புடைய பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.அனுபவம்: குறைந்தது ஓராண்டு முதல் ஐந்தாண்டு பணி அனுபவம் அவசியம்.வயது: 13.4.2024 அடிப்படையில் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.கடைசிநாள்: 13.4.2024விவரங்களுக்கு: ngel.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !