மின்சார நிறுவனத்தில் பணி
மத்திய அரசின் கீழ் செயல்படும் தாமோதர் பள்ளத்தாக்கு நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.ஜூனியர் இன்ஜினியர் பிரிவில் மெக்கானிக் 16, எலக்ட்ரிக்கல் 20, சிவில் 20, சுரங்க சூப்பர்வைசர் 4 உட்பட மொத்தம் 64 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி: தொடர்புடைய பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.வயது: 4.7.2024 அடிப்படையில் சுரங்க சூப்பர்வைசர் 18 - 30, மற்ற பணிக்கு 18 - 28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ. 300. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லைகடைசிநாள்: 4.7.2024விவரங்களுக்கு: dvc.gov.in