வங்கியில் 459 காலியிடங்கள்
பொதுத்துறையை சேர்ந்த பரோடா வங்கியில் ஒப்பந்த அடிப்படையிலான காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.சீனியர் ரிலேஷன்சிப் ஆபிசர் 234, ரிலேஷன்ஷிப் மேனேஜர் 26, சீனியர்மேனேஜர் 22, டெவலப்பர் 13, டேட்டா இன்ஜினியர் 6 உட்பட மொத்தம் 459 காலியிடங்கள் உள்ளன.கல்வித்தகுதி: சீனியர் ரிலேஷன்ஷிப் மேனேஜர் பணிக்கு எம்.பி.ஏ., மற்றவைக்கு பிரிவு வாரியாக மாறுபடும்.வயது: 2.7.2024 அடிப்படையில் சீனியர் ரிலேஷன்ஷிப் மேனேஜர் 24 - 35, மற்ற பணிக்கு பிரிவு வாரியாக மாறுபடும்.தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.விண்ணப்பக்கட்டணம்: ரூ. 600. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 100கடைசிநாள்: 2.7.2024விவரங்களுக்கு: bankofbaroda.in