அழைக்கிறது வானியல் நிறுவனம்
மத்திய அரசின் கீழ் செயல்படும் நேஷனல் சென்டர் பார் அஸ்ட்ரோபிசிக்ஸ் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.கிளார்க் 5, டிரைவர் 8, வாட்ச்மேன் 6, வொர்க் அசிஸ்டென்ட் 8, நிர்வாக உதவியாளர் 2, டெக் அசிஸ்டென்ட் 1, குக் 1, டிரேட்ஸ்மேன் 1, லேப் அசிஸ்டென்ட் 1 உட்பட 33 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி: டிரைவர், வொர்க் அசிஸ்டென்ட் பணிக்கு பத்தாம் வகுப்பு, லேப் அசிஸ்டென்ட் பிளஸ் 2, மற்ற பணிக்கு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.வயது: 1.1.2024 அடிப்படையில் 28, 31, 33 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்கடைசிநாள்: 21.7.2024விவரங்களுக்கு: ncra.tifr.res.in