உள்ளூர் செய்திகள்

வங்கி பாதுகாப்பு அதிகாரியாக வேண்டுமா

பொதுத்துறை நிறுவனங்களில் பஞ்சாப் நேஷனல் வங்கி முக்கியமானது. இந்த வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளன. நவீனமய வங்கிச் சேவைகளுக்கு பெயர் பெற்ற பஞ்சாப் நேஷனல் வங்கியில் மேனேஜர் (செக்யூரிடி)பதவியில் காலியாக உள்ள 45 இடங்களை நிரப்புவதற்கு பொருத்தமான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.வயது: விண்ணப்ப தாரர்கள் 20 வயது நிரம்பியவராகவும், 40 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.கல்வித் தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். இந்தியாவின் மூன்று பாதுகாப்புப் படைகளான தரைப்படை, விமானப்படை, கப்பல்படை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் குறைந்த பட்சம் 5 வருட காலத்திற்கு கமிஷண்டு ஆபிசராக பணி புரிந்தவராக இருக்க வேண்டும்.தேர்ச்சி முறை: பொது எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பக் கட்டணம்: ரூ.300/-ஐ பஞ்சாப் நேஷனல் வங்கியின் பாதுகாப்பு மேலாளர் பதவிக்கான கட்டணமாக செலுத்த வேண்டும்.விண்ணப்பிக்க: ஆப்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.முகவரி: Punjab National Bank,HO: 7, Bhikhaiji Cama Place, New Delhi, Pin Code-110607கடைசி நாள்: 2017 மே 6. விபரங்களுக்கு: www.pnbindia.in/Recruitments.aspx


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !