உள்ளூர் செய்திகள்

செங்கற்றாழை

செங்கற்றாழை என்பது ஏதோ சிகப்பு நிறத்தில் இருக்கும் கற்றாழை என நினைப்பது தவறு. வலைதளங்களில் செங்கற்றாழை குறித்து தேடினால் சிகப்பு நிற மடல்களை கொண்ட படங்கள் தான் புலப் படுகின்றன. அதுவும் செங்கற்றாழை அரிதான வகையாகவும், அதன் விலையும் லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ளதாக விவரம் வருகிறது. பாரம்பரிய சித்த மருத்துவர்களை அணுகி செங்கற்றாழை குறித்து கேட்ட போது உண்மை புலப்பட்டது. மூன்று ஆண்டுக்கு முன்பு மூலிகை சேகரிப்போரின் உதவியால் கிட்டிய இரண்டு செங்கற்றாழை நாற்றுகள் நட்டு வளர்த்தேன். அவைகள் நன்கு வளர்ந்து சில இளம் தளிர்களை உருவாக்கியுள்ளது. இவை பார்ப்பதற்கு பச்சை நிறத்தில் சோற்றுக்கற்றாழை போலவே இருக்கிறது.அதை வெட்டி சதைப்பகுதியை சாப்பிடும் போது அவை கசப்பு சுவையுடன் இருப்பதில்லை. சோற்றுக்கற்றாழையை வெட்டியவுடன் அதன் சாறு மஞ்சள் நிறத்தில் வரும். ஆனால், செங்கற்றாழையை வெட்டியவுடன் அதன் சாறு சிவப்பு நிறத்தில் வருகிறது. தரையில் சாறு சிந்தும் போது ரத்தம் சிந்தியது போல் காணப்படுகிறது. 'குமரி' என்று அழைக்கப்படும் கற்றாழையில் 'செம்பு' சத்து அதிகம் உள்ளது. செங்கற்றாழையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இளமையுடன், முகப்பொலிவுடன் இருக்க உதவுகிறது, என சித்த மருத்துவ குறிப்புகள் குறிப்பிடுகின்றன. எண்ணற்ற அரிதான மூலிகைகளை இழந்து விட்டோம். அழிவின் விளிம்பில் உள்ள செங்காற்றாழை போன்ற அரிய மூலிகைகளை காப்போம். வீடுகள் தோறும் அவற்றை வளர்ப்போம். வளம் பெறுவோம். தொடர்புக்கு 94867 04380.- விவசாயி ந.முத்துக்குமார், மதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !