மக்காச்சோள பயிரில் அமெரிக்கன் படைப்புழு
அமெரிக்காவை தாயகமாக கொண்ட 'பால் ஆர்மி வார்ம்' என்ற புதுவகை படைப்புழு முதன் முதலாக, அதன் தாயகத்தை கடந்து நைஜீரியாவில் கடந்த 2016ல் மக்காச்சோளத்தை தாக்குவது கண்டறியப்பட்டது.தற்போது 44 ஆப்ரிக்க நாடுகளில் பரவி அதிக சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் படைப்புழுவின் தாக்குதல் கடந்த மே 18 ல் கர்நாடக மாநிலத்தில் சிவமுகா பகுதியில் முதல் முறையாக கண்டறியப்பட்டது. இப்பூச்சிக்கு இயற்கை எதிரிகள் இல்லாமல் இருப்பது மற்றும் சாதகமான சூழ்நிலை அமைந்திருப்பது பாதிப்பு அதிகமாக காரணமாக உள்ளது.கோவை வேளாண் பல்கலையில் ஜூலையில் மக்காச்சோளத்தில் படை புழுவின் தாக்குதல் குறித்து கண்டறிந்தனர். மேலும் அந்தியூர், பவானி, அம்மாபேட்டை, பவானிசாகர், கரூர், வாகரை, கள்ளக் குறிச்சி, மதுரை சேடபட்டி ஆகிய பகுதியில் படை புழுவின் தாக்குதல் காணப்படுகிறது. பொதுவாக விருதுநகர் மாவட்டத்தில் மக்காச்சோளம் புரட்டாசியில் சாகுபடி செய்யப் படுகிறது. எனவே படைபுழுவின் சேதத்தை முன் கூட்டியே கண்டறிந்து மகசூல் இழப்பை தவிர்க்க முடியும்.பாதிப்பின் அறிகுறிகள்தாய் அந்துப்பூச்சி 100 - 200 முட்டைகள் கொண்ட குவியல்களை பெரும்பாலும் இலையின் அடிப்பகுதியில் இடுகிறது. முட்டையில் இருந்து வெளிவரும் புழுக்கள் இலைகளின் அடிப்பகுதியை சுரண்டி சேதத்தை உண்டுபண்ணும். சேதத்தால் இலைகள் பச்சையம் இழந்து வெண்மையாக காணப்படும். இளம் செடிகளில் இலையுறைகளையும் முதிர்ந்த செடியில் கதிரின் நுாலிழைகளையும் அதிகம் சேதப்படுத்தும். இரவு நேரத்தில் அதிகமான சேதத்தை விளைவிக்கும். புழுக்கள் இலையுறையினுள்ளும் சென்று பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் இலைகள் விரிவடையும் போது, அதில் வரிசையாக துளைகள் தென்படும். இளம் செடிகளில் நுனிக்குருத்து சேதமடைந்ததால் பக்க இலைகள் மற்றும் கதிர்கள் தோன்றும். ஒரு இலையுறையினுள் இரண்டு அல்லது மூன்று புழுக்கள் இருக்கும். கதிர் உருவானதற்கு பின் பாதிப்பு தோன்றினாலும், கதிரின் மேலுறையை சேதப்படுத்துவதோடு கதிரையும் சேதப்படுத்தும்.மேலாண்மை முறைகள்ஆழமாக உழவு செய்து மண்ணிலுள்ள கூட்டுப்புழுக்களை அழிக்க வேண்டும். அதிகளவு தழைச்சத்து இடுவதை தவிர்க்க வேண்டும். பயிர் சுழற்சி முறைகள் கையாளுதல் மற்றும் வயலை சுற்றி களைகள் அகற்ற வேண்டும். நுண்ணுயிர் பூச்சிக் கொல்லிகளான புவேரியா பேசியானா (1 கிராம்/1 லிட்டர் தண்ணீர்) மற்றும் பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் (2 மில்லி/1 லிட்டர் தண்ணீர்) போன்றவற்றை உபயோகிப்பதன் மூலம் பாதிப்பை கட்டுப்படுத்தலாம்.- முனைவர் ரா.விமலாதலைவர், பருத்தி ஆராய்ச்சி நிலையம்ஸ்ரீவில்லிபுத்துார்.