இயற்கை பேரிடர்களை உணரும் விலங்குகள்
இயற்கை பேரிடர்களின் போது நம்மை சுற்றியுள்ள இயற்கை நிலைகளிலும், சூழல்களிலும் ஏற்படும் மாற்றங்களை, மனிதர்களை தவிர மற்ற உயிரினங்களினால் அறிந்து கொள்ள முடிகின்றது. ஏனெனில் இயற்கையின் படைப்பினால், விலங்குகளால் தங்களை சுற்றியுள்ள காற்று வீசம் வேகம், மிக மிக குறைந்த அளவுகளில் ஏற்படும் நில அதிர்வுகள், புவியீர்ப்பு விசையில் ஏற்படும் மாற்றங்கள், நிலத்திலிருந்து வெளிவரும் வாயுக்கள், காற்றழுத்தம் மற்றும் நீராவி அழுத்தம் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களை அறிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றுள்ளது.கடந்த கால அனுபவங்கள் மூலம் நாம் விலங்குகளினால் குறிப்பாக தவளைகளால் பலமுறை நில அதிர்வுகளை அறிந்து கொள்ள முடியும் என்பது நிரூபணமாகி உள்ளது. இதை போலவே மனித பயன்பாட்டிற்காக வளர்க்கப்படும் செல்ல பிராணிகளின் நடத்தை மாற்றங்களால் மனிதர்கள் தங்களையும், தங்கள் உடைமைகளையும் காத்து கொள்ள முடியும்.பசு மாடுகள்மேய்ச்சலில் உள்ள மாடுகளில் பல மாடுகள் தரையில் படுத்திருந்தால் மழை வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது, என அர்த்தம். மேலும் அதிக எண்ணிக்கையிலான மாடுகள் தீவிரமாக மேய்ச்சலில் இருந்தால் மழை வரும் வாய்ப்பில்லை, என அர்த்தம். நில நடுக்கத்தின் முன் மாடுகள் அமைதியில்லாமல் அங்கும், இங்கும் ஓடி கொண்டும் மற்றும் கொட்டகையிலிருந்து வெளியே ஓடி வரவும் முயற்சிக்கும். பசுக்கள் நில நடுக்கத்தின் போது மேட்டுப் பகுதியிலிருந்து பள்ளமான பகுதிக்கு ஓடி செல்ல முயற்சிக்கும். புயல் வருவதற்கு 3 முதல் 7 நாட்களுக்கு முன், பசுக்கள் இரவில் சுத்திக் கொண்டும், உணவு உண்ணாமலும், அங்குமிங்கும் சுற்றி கொண்டிருக்கும். மழை பெய்யும் முன் தங்கள் பின்னங் கால்களினால் காதுகளை தேய்த்து கொண்டும், பின்னர் வாலை பலமாக ஒரு பக்கமாக ஆட்டிக் கொண்டிருக்கும்.வெள்ளாடுகள்செம்மறியாடுகள் மழை வரும் முன் ஒன்றோடு ஒன்று நெருங்கி நின்று கொண்டு மழைக்கு எதிராக ஓர் அரணை உருவாக்க முயற்சிக்கும். வெள்ளாடுகள் நில நடுக்கத்திற்கு முன் கொட்டகையினுள் செல்லாது. தெரு நாய்கள், பூகம்பத்திற்கு முன் தங்கள் உடற் கழிவுகளை தெருக்களின் நடுவிலும் அல்லது மேடான நிலப்பரப்பிலும் வெளியிடும். வீட்டில் வளர்க்கும் நாய்கள் நில நடுக்கத்திற்கு முன் தன் முதலாளியை கடித்தோ அல்லது அவர் பின் ஓடிச்சென்று தொடர்ந்து கத்தி கொண்டேயிருக்கும். பூனைகள் வீட்டிற்கு வெளியே சென்று மரங்களில் அல்லது பொந்துக்களில் ஒளிந்து கொள்ளும். நாய்கள், பூனைகள் நில நடுக்கத்திற்கு முன் மனிதர்களுடன் சண்டை போடும் மன நிலைக்கு வந்து விடும். நாய்கள் தொடர்ந்து ஓலமிட்டு கொண்டும், பூனைகள் தங்கள் எஜமானரை கடிக்க முற்படும்.கோழிகள்கோழிகள் முட்டையிடுவதை புயல், நிலநடுக்கம் மற்றும் சுனாமி வரும் முன்னரே நிறுத்தி விடும். கோழிகள் நில நடுக்கத்தின் முன் மிக உயரமான இடத்தில் அமர்ந்து ஒன்றாக சேர்ந்து கூவும். இச்செயல் இரவு நேரத்தில் கூண்டில் அடைக்கப்பட்டாலும் ஏற்படுகின்றது. புயலின் முன்னர் கோழிகள் மண்ணில் புதைந்து வெளி வருவதும், வெறித்தனமாக தாக்குவதும், தான் மறைந்து கொள்ள இடம் தேடுவதும் நடக்கும். பறவைகள் புயலின் முன் மிக தாழ்வாக பறந்து நிலப்பரப்பில் வாழும் பூச்சிகளை உண்ணும். பகல் நேரத்தில் திடீரென்று பறவைகள் தங்கள் கூடுகளுக்கு திரும்புவது மழை வரும் அறிகுறியாகும்.கினீயாக் கோழிகள்மழை வருவதற்கு முன்னர் தான் கினீயா கோழிகள் கூடுகள் கட்ட ஆரம்பிக்கும். அதன் மூலம் மழை வருவதை கண்டறிய முடியும். நிலநடுக்கத்தின் முன் குதிரைகள் தங்கள் கூடாரங்களை விட்டு வெளியே செல்ல முயற்சிக்கும். மேலும் அவை மனிதர்களை தாக்க முயற்சிக்கும். நில நடுக்கம் ஏற்படுவதற்கு முன்னர் தனது வாலை கடிக்கவும், அழுகை சத்தத்தை எழுப்பும். பூனை மீன்கள் நில நடுக்கத்தை மிக விரைவாக உணர்ந்து கொள்ள கூடியவையாகும். அவை நில நடுக்கத்திற்கு முன் விரைவாக நீந்தி கொண்டிருக்கும். சுனாமியின் முன் மீன்கள் நீரிற்கு வெளியே குதித்து தங்களை காத்து கொள்ள முயற்சிக்கும்.எறும்புகள்சிவப்பு மற்றும் கருப்பு எறும்புகள் பெருமழை மற்றும் புயலிற்கு முன் தங்கள் புற்றுகளை மிக பாதுகாப்பாகவும் பெரியதாகவும் கட்டி கொள்ளும். எறும்புகள் தங்கள் இனத்துடன் மழை வரும் முன் மரங்களின் மேல் சென்று ஒளிந்து கொள்ளும்.- உ.ச.கல்யாண், ர.ஞானதேவிசீ. ரங்கசாமி, தி.ஹரிஹரன்கால்நடை இனப்பெருக்கம் மற்றும் ஈனியல் துறைகல்நடை மருத்துவ கல்லுாரிசென்னை.