விளைச்சலை பாதிக்கும் எறும்புகள்
எறும்புகளும், கரையானும் விவசாயப் பயிர்களுக்கும், மரங்களுக்கும், தோப்புகளுக்கும் பல இடைஞ்சல்களை உண்டாக்குகின்றன. தென்னை மரங்களில் கரையான் வந்தால் மரங்கள் பாதிப்பாகும். காய்கள் எண்ணிக்கை குறையும். மரங்களில் ஏற முடியாது. கட்டெறும்புகள், வண்டுகள், தேரை போன்ற பல வகை உயிரினங்கள் தென்னை மரங்களில் வாழும். இவற்றை ஆண்டுக்கு இரண்டு முறை அகற்ற வேண்டும். மாந்தோப்புகளில் சிவப்பு எறும்புகள் இலைகளில் கூடு கட்டி காய்ப்பை குறைத்து விடும். சில ரசாயன பொடிகளை மரத்தை சுற்றி போட்டு சிலர் அவற்றை அழித்து விடுவர். ஏராளமான எறும்புகள் செத்து மடியும். அவை ஒழிக்கப்பட்ட பின் மரங்கள் நன்கு காய்க்கும். வெள்ளரிக்காய்களை எறும்பை விரட்டுவதற்கு பயன்படுத்துகிறார்கள். சிறு, சிறு துண்டுகளாக வெட்டியோ அல்லது துருவியோ போட்டால் எறும்புகள் ஓடி விடும். புதினாவை உலர்ந்தி பொடி செய்தும், கிராம்புகளை நறுக்கி எறும்புகள் நடமாடும் பகுதியில் போட்டால் ஓடிவிடும். எலுமிச்சை சாறு கலந்த நீரை வைத்து துடைத்தால் எறும்புகள், கரையான்கள் வராது. தொடர்புக்கு 95662 53929.எம்.ஞானசேகர் விவசாய ஆலோசகர், சென்னை.