ஆடு, மாடுகளுக்கு தீவனமாக அசோலா
ஆடு, மாடுகளுக்கு, அசோலா தீவனமாக வழங்குவது குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்துார் உழவர் பயிற்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் கே.பிரேமவல்லி கூறியதாவது:கோடை காலங்களில், மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடுகளுக்கு தீவனம்பற்றாக்குறை ஏற்படும். இதனால், பால் உற்பத்தி குறைந்து, ஆடு, மாடு வளர்ப்பில் வருவாய் இழப்பு ஏற்படும். இதை தவிர்க்க, கோடை கால தீவன தட்டுப்பாட்டை சமாளிக்க வீடு தொட்டிகள், குளங்களில் வளர்க்கப்படும் அசோலாவை தீவனமாக வழங்கலாம். குறிப்பாக, கோடை காலத்தில் மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடுகள் மேய்ச்சல் இன்றி பரிதவிக்கும். இதை தவிர்க்க, வீட்டு நீர் நிலைகளில் வளர்க்கப்படும் அசோலாவை தீவனமாக வழங்கலாம். அதற்கேற்ப அசோலா வளர்ப்பு கட்டமைப்பு அமைத்துக் கொள்ளவேண்டும். ஆடு, மாடு களின் வளர்ச்சி ஏற்ப அசோலா தீவனமாக வழங்கலாம். இதில், தழைச்சத்து, மணிசத்து, சாம்பல்,சுண்ணாம்பு, கந்தகம்,மக்னீசியம் ஆகிய சத்துகள்நிறைந்திருப்பதால், பால் உற்பத்தி மற்றும் கால் நடைகளின் இன விருத்திக்கு பஞ்சம் இருக்காது. இவ்வாறு கூறினார். தொடர்புக்கு: கே.பிரேமவல்லி, 97907 53594