உள்ளூர் செய்திகள்

மூன்று பருவ காலங்களிலும் பிசினி ரக நெல் சாகுபடி

செம்மண் நிலத்தில், பிசினி ரக நெல் சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், பவுஞ்சூர் ஒன்றியம், நீலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த நீலபூ.கங்காதரன் கூறியதாவது: பல வித பாரம்பரிய ரக நெல் மற்றும் பயறு வகை பயிர்களை சாகுபடி செய்து வருகிறேன். அந்த வரிசையில், செம்மண் நிலத்தில், பிசினி ரக நெல் சாகுபடி செய்துள்ளேன். பாரம்பரிய ரகத்தில், பிசினி ரக நெல் தனி ரகமாகும். இது, 120 நா ளில் விளைச்சல் தரக்கூடியது. நெல் காவி நிறத்திலும், அரிசி சிவப்பு நிறத்திலும் இருக்கும். இந்த ரக நெல், சம்பா, நவரை, சொர்ணவாரி ஆகிய மூன்று பருவ காலங்களிலும் சாகுபடி செய்யலாம். குறிப்பாக, வறட்சி காலங்களிலும், வெள்ளப்பெருக்கு காலங்களிலும், தாங்கி வளரும் தன்மையுடையது. மேலும், களர், உவர் நிலத்திலும் பிசினி ரக நெல் சாகுபடி செய்யலாம். இந்த ரக அரிசியில், வடிக்கும் சாதம் அதிக பிசுபிசுப்பு தன்மையுடன் இருக்கும். இது, கருவுற்ற பெண்கள், குழந்தை பெற்ற பெண்களுக்கு ஏற்ற ரக நெல். இதை, உணவாக எடுத்துக்கொண்டால் மூட்டு வலி, முதுகு வலி உள்ளிட்ட பல வித நோய்களை கட்டுப்படுத்தும் குணம் உடையது. இவ்வாறு அவர் கூறினார். தொடர்புக்கு: நீலபூ.கங்காதரன், 96551 56968


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !