உள்ளூர் செய்திகள்

மரத்தூளை பயன்படுத்தி கஸ்தூரி மஞ்சள் சாகுபடி

மண்ணில்லாத விவசாயத்தில், கஸ்துாரி மஞ்சள் சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், புரிசை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி எம்.தனஞ்செயன் கூறியதாவது:பாரம்பரிய ரக நெல், ரோஜா, காய்கறி ஆகியவை சாகுபடி செய்து வருகிறேன். அந்த வரிசையில், மண்புழு உரம், மரத்துாள் ஆகியவை பயன்படுத்தி, செம்பருத்தி, டிராகன் பழம், கருப்பு நிற மஞ்சள் ஆகியவை சாகுபடி செய்து வருகிறேன். அந்த வரிசையில், கஸ்துாரி மஞ்சள் சாகுபடி செய்து வருகிறேன். கஸ்துாரி மஞ்சளை குறிப்பிட்ட விவசாயிகள் மட்டுமே சாகுபடி செய்கின்றனர். இதை மதிப்பு கூட்டி விற்பனை செய்தால், அதிக வருவாய் ஈட்டலாம்.குறிப்பாக, வரப்பு பயிராகவும், பாத்தி முறையிலும் கஸ்துாரி மஞ்சளை சாகுபடி செய்யலாம். அறுவடையின்போது குறைந்த எடையுள்ள கஸ்துாரி மஞ்சள் மட்டுமே கிடைக்கும். அதை சுத்தம் செய்த பின், பவுடராக மாற்றி விற்பனை செய்யும் போது கணிசமான வருவாய் ஈட்ட முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: எம்.தனஞ்செயன், 88257 46684.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !