வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இது போன்று தினை, சாமை போன்றவற்றையும் எழுதுங்க
சிறுதானியங்களில் சிறந்த வரகு பயிரானது மண்ணிற்கும், மனிதனுக்கும் நன்மை தரும் பயிர். வரகு பயிரானது வறட்சியை யும், வெப்பத்தையும் தாங்கி வளரக்கூடியது. தமிழகத்தில் பிரதான சிறுதானியமாக பயிரிடப்படுகிறது. அதிக காற்று, வறட்சி, கனமழை போன்ற கடினமான சூழ்நிலையிலும் வளரும் வரகு பயிரில் அதிக இரும்புச்சத்து, நார்ச்சத்து உள்ளது. மேலும் பறவைகள், விலங்குகளால் இப்பயிரை சேதப்படுத்தும் வாய்ப்பு குறைவு.மானாவாரியில் ஆடிப்பட்டம் (ஜூன்-, ஜூலை), புரட்டாசி பட்டமும் (செப்., - அக்.,) இறவைக்கு அனைத்து பருவங்களும் ஏற்றது. மானாவாரிக்கு 350 முதல் 500 மி.மீ., வரை நீர் தேவைப்படும். கோடை உழவு செய்த நிலத்தில் ஒரு முறை டிராக்டரால் உழவேண்டும். ஏக்கருக்கு 5 டன் தொழுஉரம் அல்லது ஒரு டன் மண்புழு உரம் இட்டு கொக்கி கலப்பையால் இருமுறை உழவேண்டும். இதனுடன் 800 கிராம் (4 பாக்கெட்) அசோஸ் பைரில்லம் உயிர் உரத்தையும் பயன்படுத்தலாம்.கோவை வேளாண் பல்கலையின் அத்தியேந்தல் வெளியீடான ஏ.டி.எல். 1 ரக வரகை பயிரிட்டால் 110 நாட்களில் ஏக்கருக்கு ஒரு டன் அளவு மகசூல் பெறலாம்.விதைநேர்த்தி முறைவிதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன், ஒரு ஏக்கருக்கு தேவையான 5 கிலோ விதைகளுடன் 50 கிராம் சூடோமோனஸ், 200 கிராம் அசோஸ்பைரில்லம் சேர்த்து கலந்து வைக்க வேண்டும். அந்த விதைகளுடன் இரண்டு பங்கு (10 கிலோ) மணலுடன் கலந்து விதைத்தால் விதைப்பு பரவலாக இருக்கும். பயிர்களின் வளர்ச்சி சீராக இருக்கும். விதைத்த 15வது நாள் மற்றும் 45வது நாளில் கையால் களை எடுக்க வேண்டும். விதைத்த 20வது நாளில் பயிர்களின் எண்ணிக்கை ஒரே இடத்தில் அதிகமாக இருந்தால் பயிர் களைப்பு செய்யலாம்.மண் பரிசோதனை அடிப்படையில் ஏக்கருக்கு 55 கிலோ சூப்பர் பாஸ்பேட்டை அடியுரமாக இட வேண்டும். மேலும் அடியுரமாக ஏக்கருக்கு 19 கிலோ யூரியாவை இடவேண்டும். விதைத்த 45வது நாள் மேலுரமாக 19 கிலோ யூரியா இட வேண்டும். நுண்ணுாட்டச்சத்து குறைபாட்டை போக்க ஏக்கருக்கு 5 கிலோ அளவு வேளாண் பல்கலையில் சிறுதானிய நுண்ணுாட்டக் கலவையை 20 கிலோ மணலுடன் கலந்து நிலத்தின் மேல் சீராக துாவ வேண்டும்.பூச்சி, நோய் மேலாண்மைவரகு பயிர்களில் பூச்சி, நோய் தாக்குதல் குறைவு. குருத்து ஈ தாக்குதல் ஏற்பட்டால் ஒரு ஏக்கருக்கு 100 மில்லி மீதைல் டெமட்டான் 25 இ.சி., யை 200 லிட்டர் தண்ணீருடன் கலந்து விதைத்த 15 முதல் 25ம் நாட்களில் தெளிக்கலாம். இலையுறை அழுகல் நோய் ஏற்பட்டால் பூப்பூக்கும் 45 வது நாளில் ஏக்கருக்கு 400 கிராம் மான்கோசெப் மருந்தை 200 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்கலாம்.110 நாட்களில் அறுவடைக்கு தயாராகி விடும். பயிர்களில் மூன்றில் இரண்டு பங்கு முதிர்ச்சியடைந்ததும் அறுவடை செய்யலாம்.-சரவணன்தொழில்நுட்ப வல்லுநர் (உழவியல்)வேளாண் அறிவியல் மையம்திண்டுக்கல்
இது போன்று தினை, சாமை போன்றவற்றையும் எழுதுங்க