உள்ளூர் செய்திகள்

முட்டை குடிக்கும் கோழி

முட்டையிடும் பருவத்தில் உள்ள சில தாய்க்கோழிகள் முட்டையை உடைத்து குடிப்பதுண்டு. இத்தீய பழக்கம் ஒரு கோழியிடம் இருந்தால் விரைவாக பண்ணை முழுவதும் பரவி விடும். ஒரு முறை முட்டையை உடைத்து குடித்து ருசி கண்டால் அதுவே அதற்கு பழக்கமாகி விடும்.முட்டையிட்டு அதிக நேரம் கழித்து முட்டைகளை சேகரிப்பது அல்லது எடுக்காமல் பண்ணையில் விட்டு வைப்பது, உடைந்த முட்டைகளை மற்றும் தோல் முட்டைகளை உடனடியாக அப்புறப்படுத்தாமல் இருப்பதுபோன்ற காரணங்கள் இச்செயலை புரிய கோழிகளை துாண்டுகின்றன.இதை தடுக்க காலை 11:00 மணி, பகல் 3:00 மணி என இரண்டு முறை முட்டைகளை சேகரிக்க வேண்டும். உடைந்த முட்டை மற்றும் தோல் முட்டைகளை அடிக்கடி எடுக்க வேண்டும்.தீவனத்தில் கால்சியம் சத்தினை அதிகப்படுத்தினால் தோல் முட்டையிடுவது தவிர்க்கப்படும்.முட்டைககளில் சிறிய துளையிட்டு அதன் வெண்கரு மற்றும் மஞ்சள் கருவை வெளியேற்றிய பிறகு கடுகு மற்றும் புகையிலையை அரைத்து அக்கலவைவையுடன் வேப்பெண்ணெய்யை கலந்து முட்டையின் ஓட்டினுள் செலுத்த வேண்டும்.பின்னர் முட்டையின் ஓட்டையை மெழுகு கொண்டு மூடிவிட்டு பண்ணையில் ஆங்காங்கே வைத்து விட வேண்டும். கோழிகள் இம்முட்டைகளை உடைத்து குடித்தால் இந்தப் பழக்கத்தை விட்டு விடும் அல்லது குறைத்து கொள்ளும்.தொடர்புக்கு 94864 69044.- டாக்டர். வி.ராஜேந்திரன்முன்னாள் இணை இயக்குனர்கால்நடை பராமரிப்புத்துறை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !