அமுதக் கரைசல்
பயிர்களின் 'சத்து டானிக்' என அழைக்கப்படும் அமுதக் கரைசலை விவசாயிகள் தாங்களாகவே தயாரித்து பயனடையலாம். இதனால் செலவு மிச்சம். தரமான அமுதக் கரைசல் பயிர்களின் கிரியா ஊக்கியாக பயன்படுத்தலாம். செயல்முறைபசுஞ்சாணம் 10 கிலோ, கோமியம் 10 லிட்டர் இரண்டையும் 90 லிட்டர் தண்ணீரில் கரைத்து நாற்றங்காலில் தண்ணீர் பாயும் இடத்தில் வைத்து வயல் முழுவதும் பரவும்படி செய்வதால் வளமான நாற்றுகள் கிடைக்கும். 'மட்கா' எனும் பூச்சிக்கொல்லிபுளித்த மோர் 15 லிட்டர், தண்ணீர் 15 லிட்டர், வேப்ப இலை 1 கிலோ என்ற அளவில் சேகரித்து கொள்ள வேண்டும். பின் அனைத்தையும் கலந்து பானையில் 15 முதல் 20 நாட்கள் மூடி வைத்து வடிகட்டி பயிர்களில் தெளித்தால் நெல் வயல்களில் காணப்படும் பூச்சிகள் அழியும். 'சத்து டானிக்' தயாரித்தல்பசுஞ்சாணம் 15 கிலோ, கோமியம் 15 லிட்டர் அல்லது தண்ணீர் 15 லிட்டர் அல்லது வேப்ப இலை 1 கிலோ அல்லது எருக்கந்தழை 1 கிலோ என்ற அளவில் சேகரித்து கொள்ள வேண்டும். பின் அனைத்தையும் கலந்து பானையில் 15 முதல் 20 நாட்கள் மூடி வைத்து, வடிகட்டி பயிர்களில் தெளித்து நெல் வயல்களில் காணப்படும் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். பயிர்களின் சத்து டானிக்காகவும் அமையும். தொடர்புக்கு 95786 69455.- வி. ரெங்கசாமிமுன்னாள் உதவி வேளாண் அலுவலர்பூவனுார், திருச்சி.