விவசாயிகள் பயமின்றி நெல் சாகுபடியில் ஈடுபடலாம்
மதுரைக்கு அருகில் மேலூரில் வைகை அணைக்கட்டில் தண்ணீர் திறந்ததும் விவசாய பணிகள் அனைத்தும் துவங்கப்பட்டன. எடீடி 36, எடீடி 39, எடீடி 45, வெள்ளைப் பொன்னி, ஜே 13 மற்றும் ஜேசிஎல் நெல் ரகங்களை நடவு செய்து இரண்டு மாத பயிராக உள்ளது. அணைக்கட்டில் தண்ணீர் இல்லாததால் விவசாயிகள் துணிவே துணை என்று மழையை நம்பிக் கொண்டு இருக்கின்றனர். ஏற்கனவே மதுரை மாவட்ட விவசாயிகள் ஒரு ஏக்கரில் 40லிருந்து 45 மூட்டைகள் மகசூல் எடுத்துள்ளார்கள்.இப்போது விவசாயிகள் அதே போல் மகசூல் எதிர்ப்பார்க்கிறார்கள். அணைக்கட்டில் தண்ணீரே இல்லாததால் சற்று தளர்ந்து உள்ளனர். மழை வரும் என்று மிக நம்பிக்கையோடு இருக்கின்றனர். நெல் ரகங்களாகிய ஆடுதுறை 36, ஆடுதுறை 45 இவைகளின் விதைகளை முளை கட்டி சேற்றில் நேரிடையாக விதைக்க இருக்கிறார்கள். அடியுரம், மணிச்சத்து மட்டும் போட இருக்கிறார்கள். பொடி செய்யப்பட்ட ஜிங்க் சல்பேட்டினை மண்ணுடன் கலந்து வயலில் தூவ வேண்டும். பிறகு சமப்படுத்தி பாத்தி அமைத்து நிலத்தை சரி செய்தனர். இரண்டு பாத்திகளுக்கு இடையில் ஒரு சர்வே கல்லிணை இழுக்க வேண்டும். இதில் முளைகட்டிய விதை விதைக்கப்பட்டது. உடனே சார்ட்டன் களை இடப்பட்டது. பயிர் வளர்ந்த பின் பயிரை கலைத்து விடப்பட்டது. வயலில் யூரியா உரம் இடப்பட்டது. மழையை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள். விவசாயிகள் துணிச்சலோடு உள்ளனர்.விவசாயிகள் நெல் தரிசில் பயறு, உளுந்து தெளிக்க இருக்கின்றனர். பூமி மெழுகு பதத்தில் இருக்கும்போது உளுந்து ரகங்கள் எடீடி 2, எடீடி 3 மற்றும் எடீடி 5 விதைக்கலாம். மணற்பாங்கான வடிகால் வசதி இவைகளது உதவியோடு விதைக்க வேண்டும். 90 நாட்களில் அறுவடை வர வாய்ப்பு வரும். மகசூலும் கிடைக்கும். நிலத்திற்கு ஏடிபி உரம் இடவேண்டும். சங்கு பருவத்தில் ஏடிபி 20 கிலோ இடலாம். சாகுபடி செலவு ரூ.4,000 வரை ஆகும். சுமார் 500 கிலோ மகசூல் கிடைக்கும். நிகர லாபம் ரூ.5,000 வரை கிடைக்கும். விவசாயம் என்பது ஒரு சூதாட்டம் தான். நாம் நினைப்பது போல் எல்லாம் இருந்து விடாது. மழையை வராது என்ற எண்ணம் இருக்கக் கூடாது. உங்களுக்கு தற்போது தேவை துணிவு.- எஸ்.எஸ்.நாகராஜன்