கோடைக்கு ஏற்ற தீவன மரங்கள்
பருவ காலங்களின் சுழற்சியில் ஆண்டு தோறும் கோடையின் தாக்குதலை விவசாயிகள் சமாளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. முக்கியமாக பசுந்தீவன தட்டுப்பாடு கால்நடை வளர்ப்பில் சிரமம் தருகிறது. எனவே கோடையில் பசுந்தீவன தட்டுப்பாட்டை சமாளிக்க தீவன மரங்களை வளர்க்க வேண்டும். வேலி மற்றும் கால்வாய் ஓரங்களில் மரங்களை வளர்க்கலாம். தழை பறிப்பில் சில அறிவியல் நுணுக்கங்களை கடைப்பிடித்தால் கோடையில் பசுந்தீவனத் தட்டுப்பாடு வராது. மரத்தின் உயரத்தில் மூன்றில் ஒரு பகுதியில் உள்ள இலைகளை அந்த மரத்தின் வளர்ச்சிக்கென விட்டு விட வேண்டும்.இலைகள் பறிக்கப்பட்ட ஒரு கிளை மீண்டும் தழைக்கும் வரையில் அதில் இலைகளை ஒடிக்கக்கூடாது. சுமார் 7.5 செ.மீ., தடிமனுக்கு மேலுள்ள கிளைகளில் தான் இலை பறிக்க வேண்டும். புரதச்சத்து அதிகம் நிறைந்த இலைகளை தரக்கூடிய கல்யாண முருங்கை, பூவரசு போன்ற மரத்தின் கன்றுகள் அரசு கால்நடை பராமரிப்பு துறை மூலம் இலவசமாக வழங்கப்படுகின்றன. பசுந்தீவனங்கள் கால்நடைகளின் உணவு தேவையை நிறைவு செய்வதுடன் இன விருத்திக்கும் உதவும் 'வைட்டமின் ஏ'சத்தினையும் ஏராளமாக தருகின்றன. தொடர்புக்கு 94864 69044.- டாக்டர்.வி.ராஜேந்திரன்முன்னாள் இணை இயக்குனர்கால்நடை பராமரிப்புத்துறை.