உள்ளூர் செய்திகள்

சுரைக்காய் சாகுபடி இரட்டிப்பு வருவாய்

ஆடி பட்டத்தில், சுரைக்காய் சாகுபடி செய்தால், இரட்டிப்பு வருவாய் ஈட்டலாம். இது குறித்து, புரிசை கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி எம். சரவணன் கூறியதாவது:சுரைக்காய், அனைத்து பருவ காலங்களிலும், பயிரிடலாம். கோடை காலங்களில், நிலத்திலும். மழைக்காலங்களில், பந்தல் காய்கறி வளர்ப்பு முறையிலும் பயிரிடலாம்.குறிப்பாக, ஆடி பட்டத்தில், சுரைக்காய் சாகுபடி செய்தால், விரதமாத காலங்களில், கூடுதல் வருவாய் ஈட்டலாம். அப்போது, 10 ரூபாய்க்கு விற்கும் சுரைக்காய்கூட, 30 ரூபாய்க்கு இரட்டிப்பான விலைக்கு விற்கும். கூடுதல் வருவாய் பெருக்குவதற்கு வழி வகுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு:98657 88942


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !