மாடி தோட்டத்திலும் பசலைக்கீரை வளர்ப்பு
பசலைக்கீரை சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், புள்ளலுார் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பி.சத்தியபாணி கூறியதாவது: களிமண் நிலத்தில் நாட்டு சுரைக்காய், தக்காளி, கீரை உள்ளிட்ட காய்கறிகளை சாகுபடி செய்து வருகிறேன். இவற்றை ரசாயன உரங்களை பயன்படுத்தாமல், இயற்கை உயிர் உரங்களை பயன்படுத்தி, சாகுபடி செய்து வருகிறேன். அந்த வரிசையில், பாத்தி முறையில் பசலைக்கீரை சாகுபடி செய்துள்ளேன். இந்த கீரையை, விளை நிலம் மற்றும் மாடி தோட்டத்திலும் சாகுபடி செய்யலாம். இந்த பசலைக்கீரையை ஒரு முறை சாகுபடி செய்தால், வாரம் ஒரு முறை அறுவடை செய்யலாம். புதினா, பொன்னாங்கன்னி உள்ளிட்ட கீரைகளை போல பசலைக் கீரைகளிலும் வருவாய் கிடைக்கிறது. குறிப்பாக, பசலைக்கீரையில் அதிக சத்துக்கள் நிறைந்திருப்பதாலும், மருத்துவ குணமுடையது என்பதாலும், அதிக விலை கொடுத்து வாங்கவும் மக்கள் தயக்கம் காட்டுவதில்லை. இவ்வாறு அவர் கூறினார். தொடர்புக்கு: பி.சத்தியபாணி, 93808 57515