உள்ளூர் செய்திகள்

வெட்டி வேரில் அதிக வருவாய்

வெட்டி வேர் சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் அடுத்த, பிச்சிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பி.எல்.ஆர்., பண்ணை முதுகலை பட்டதாரி விவசாயி பி.மாதவி கூறியதாவது:சவுடு மண் நிலத்தில், இயற்கை உரங்களை பயன்படுத்தி காய்கறி, பூ, பழங்கள் ஆகியவை சாகுபடி செய்து வருகிறேன். அந்த வரிசையில், மரங்களின் நிழலில், வெட்டிவேர் சாகுபடி செய்துள்ளேன்.நம்மூர் சவுடு மண்ணுக்கு, வெட்டி வேர் செடி வேகமாக வளர்கிறது. இந்த வெட்டி வேர் செடி ஆளுயரத்திற்கு வளர்ந்து நிற்கும் போது, செடியை வேருடன் அகற்றி, வேரை சுத்தம் செய்து, உலர்த்திய பின் வெட்டிவேர் மாலையாக பயன்படுத்தலாம்.உதாரணமாக, 10 சென்ட் நிலத்தில் வெண்டை, கத்திரி, கொத்தவரைக்காய் ஆகிய காய்கறி சாகுபடி செய்தால், ஒரு ஆண்டிற்கு 20,000 ரூபாய் வருவாய் கிடைக்கும். அதே பரப்பளவில் வெட்டிவேர் சாகுபடி செய்யும் போது, ஒரு ஆண்டு கழித்து அறுவடை செய்தால், 30,000 ரூபாய் வருவாய் பெறலாம்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: பி.மாதவி, 97910 82317.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

நிக்கோல்தாம்சன்
செப் 15, 2025 02:58

நான் பத்து சென்டில் விளைவித்து கொடுக்கிறேன் எனக்கு நீ சொன்னது போல 30000 ரூபாய் தருவாயா மாதவி ? சும்மா நானும் எழுதுகிறேன் என்று நகைச்சுவை நடிகர் மாதிரி எழுதிக்கிட்டு திரியாதீங்க , தினமலரின் விவசாய மலர் பகுதி பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கோரிக்கை