உள்ளூர் செய்திகள்

கால்நடை வளர்ப்பு பயிற்சி

மதுரை திருப்பரங்குன்றம் தியாராஜர் பொறியியல் கல்லுாரி சாலையில் 'தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை பயிற்சி மற்றும் ஆய்வு மையம்' உள்ளது. இங்கு பல்கலை சான்றிதழுடன் கூடிய ஒரு மாத கால பயிற்சியாக கறவை மாடு வளர்ப்பு, வெள்ளாடு வளர்ப்பு, நாட்டுக்கோழி வளர்ப்பு பற்றிய சிறப்பு பயிற்சிகள் மற்றும் களப்பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. ஆர்வம் உள்ள கால்நடை விவசாயிகள், சுய தொழில் துவங்குவோர், இளைஞர்கள், பெண்கள் பயன் பெறலாம். சிறந்த கால்நடை வல்லுனர்கள் பயிற்சி அளிப்பர். பயிற்சிக்கு பின் கால்நடை பண்ணை அமைக்க, வங்கிக்கடன் பெற்று தொழில் துவங்க ஆலோசனை வழங்கப்படும். நேரில் அல்லது தொலைபேசி 0452 248 3903 ல் விபரம் அறியலாம்.- டாக்டர் உமாராணிமையத்தலைவர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !