மா பராமரிப்பு உத்திகள்
மா சாகுபடியாளர்கள் பலர் தனது தோட்டத்தை குத்தகைக்கு விடுவது, அதன் மூலம் ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் கிடைத்தாலும் போதும் என்ற மன நிலையில் இருப்பது தவறு. மா மரங்கள் ஒவ்வொன்றும் வரிசையாக எண்கள் இட்டு முறையாக பராமரித்தால் 160 ஆண்டுகள் கூட நல்ல பலன் தரும் மாமரங்கள் அவை. மா மரங்கள் ஒரே நேரத்தில் பூத்து; ஒரே நேரத்தில் காய்ப்பது அரிது. தனித்தனியே உற்று நோக்கினால் பல வகை, பல ரக மா வகைகளில் பூக்கும் தன்மையும், பூச்சி நோய் தாக்குதலை தாங்கி வளரும் தன்மையும் கூட ஒரே மாதிரி இருக்காது.நல்ல சூழலில் பூத்த மாமரம் அதிக காய்கள் பிடிக்கும் போது பூச்சி தாக்குதல் துவங்கும். ஒரு மரத்தில் ஆயிரம் பூக்கள் இருப்பின் ஒன்று அல்லது அரை சதவீதம் தான் பிஞ்சு விட வாய்ப்பு இயற்கையாகவே உள்ளது. மாந்தோப்பில் தேனீக்கள் நன்மை செய்பவை. குத்தகைக்கு விட்ட தோப்பில் பல வித மருந்து தெளிப்பதால் பயன் அதிகம் வராது. இதுவே மா மகசூல் பெற இயலாத சூழலை உருவாக்கி விடும். முறையான கவாத்து செய்தாலே தத்துப்பூச்சிகள் வராது தடுக்கலாம். காய்கள் பிடிக்காத தருணம் கூட தத்துப்பூச்சிகள் கட்டுப்படுத்திட மருந்து தேவைப்படும். வேப்ப எண்ணெய்யை ஒரு லிட்டர் நீரில் 5 மில்லி வீதம் தெளித்தாலே போதும். தேனீக்கள் சாகாது. நன்மை செய்யும் பூச்சிகள் பேணப்படும்.- டாக்டர்.பா.இளங்கோவன்வேளாண் துணை இயக்குனர், தேனி98420 07125