உள்ளூர் செய்திகள்

காளாண் எனும் காய்கறி இறைச்சி

காளாண் என்ற உணவு பண்டம் இயற்கையாகவும், செயற்கையாகவும் உண்டாக்கப்படுகிறது. இதனை சுவையுடன் சமைத்து உண்போர் அதிகம். வெள்ளை நிறத்தில் உருவாகும் காளாண் தாவர வகையை சேர்ந்தது. இதில் 80 சதவீதம் ஈரப்பதம் உள்ளது. மிக எளிதில் வளரக்கூடிய ஒரு தாவரம். 80 முதல் 90 சதவீதம் நிழலில் செழிப்பாக வளரும்.காளாண் குடில்காளாண் பண்ணை அமைக்க மூன்றடி ஆழம் உள்ள பள்ளம் அமைக்க வேண்டும். சரியாத, சரிவு ஏற்படாத அளவில் செங்கல் பூச்சு தரைக்கு மேலாக இரண்டு அடிக்கு குறையாத உயரம் கொண்டதாக இருக்க வேண்டும். பள்ளத்தின் மேற்பரப்பில் நீல நிற பாலித்தீன் இட்டு கூண்டு வடிவில் உருவாக்கி, உள்புறம் காளாண் வளர்ந்து வரும் விதமாக படுக்கைகளை அமைத்து, தினமும் பாதுகாத்து வர வேண்டும். கூண்டுக்குள் நல்ல காற்றோட்டம் ஏற்படுமாறு செய்வது அவசியம். விதைகளை இட்டு, அவற்றில் நன்கு வளர்ச்சி அடைந்த வித்துக்களை சுமார் 50 சென்டி மீட்டர் உள்ள பாலித்தீன் பைகளில் இட்டு வளர்க்கும் படுக்கைகளை உண்டாக்க வேண்டும். உலர்ந்த வைக்கோல் நறுக்குகளை ஐந்து மணி நேரம் ஊறும்படி செய்து அகண்ட பாத்திரத்தில் இட்டு தேவையான தண்ணீரில் மூக்கால் மணி நேரம் வேக விட வேண்டும். இறுதியாக தண்ணீரை வடித்து ஈரத்தை போக்க சுத்தமான இடங்களில் உலர்த்த வேண்டும். வைக்கோல் பாதியளவு ஈரமாக இருக்கும் போது அடுக்கடுக்கான முறைகளை உண்டாக்கி, உருளை உருண்டை படுக்கைகளை செய்து, வித்து புட்டிகளில் இரு உருளையான படுக்கைகளை உண்டாக்கலாம். இவை ஏறத்தாழ இருபது நாட்களுக்குள் வெள்ளை நிறமாக கவர்ச்சியுடன் காணப்படும். பரிபூரணமாக இவை வளர்ச்சி அடைந்த பின் சமைப்பதற்கு பயன்படுத்தலாம். மாமிசத்துக்கு இணையான சத்துக்கள் காளாண் தாவரத்தில் பொதிந்து இருப்பதால் 'காளாண் எனும் காய்கறி இறைச்சி' என கூறுவர். காளாணை நோய்வாய்ப்படாமல் பக்குவமாக பாதுகாத்துப் பயன்படுத்த வேண்டும்.- எஸ்.நாகரத்தினம்விவசாய ஆலோசகர்விருதுநகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !