உள்ளூர் செய்திகள்

பஞ்சகவ்யா

விவசாயிகள் எந்த பயிரை சாகுபடி செய்தாலும் பல வித தேவைகளை பஞ்சகவ்யா பூர்த்தி செய்து நல்ல பலன் தரும். தயாரிப்பது மிக எளிது மற்றும் விலைக்கு வாங்கிக்கூட பயன்படுத்தலாம் என்ற நிலை உள்ளது. விதை நேர்த்தி, இலை வழி தெளிப்பு, வேர்ப்பகுதியில் ஊற்றுதல் நுண்ணீர்ப் பாசனம் மூலம் பயிரின் வேர்ப்பகுதிக்கு செலுத்துதல், இப்படி எத்தனையோ வழிகளில் பஞ்சகவ்யாவை பயிருக்கு அளிக்க முடியும். பஞ்சகவ்யா தயாரிக்க பசுமாடு சாணம், பால், தயிர், நெய் மற்றும் பசுவின் கோமியம் (சிறுநீர்) எனும் ஐந்து (பஞ்ச) பொருட்கள் மற்றும் கிருமிக்கு உதவும் உரிய உணவு பொருட்களான கரும்புச்சாறு, வாழைப்பழம், இளநீர் இவற்றை சேர்த்து தயாரிப்பது தான் பஞ்சகவ்யா. இது பயிர் வளர்ந்திட உகந்த வளர்ச்சி ஊக்கி மட்டுமல்லாமல் பூச்சி நோய் தடுப்பு மருந்தாகவும் செயல்படுகிறது.பஞ்சகவ்யா சாதாரணமாக 100 லிட்டர் தண்ணீரில் 3 லிட்டர் என்ற அளவு கலந்து தெளிப்பதோ, வேர் மூலம் தருவதோ நன்மை தரும். பயிர்களின் கிளைக்கும் பருவம், கருவுறும் பருவம், கதிர் வெளிவரும் தருணம், என தானியப் பயிர்களின் பல நிலைகளிலும் பதர் இல்லாமல் காக்கவும் தான்ய எடைகள் கூடவும் உதவுகிறது. காய்கறிப் பயிர்கள், பருத்தி, மிளகாய், எண்ணெய் வித்து பயிர்கள், மரபயிர் இப்படி எல்லாப் பயிரிலும் நம்மை செய்யும் பஞ்சகவ்யா தயாரித்திட 18 நாட்கள் ஆகும். உடன் தெளிக்க வேண்டிய விவசாயிகள் முதல் முறை வெளியே வாங்கி பயன்படுத்தி அடுத்த தேவைக்கு தாமே தாயாரிக்கலாம். வாழைப்பழம், தென்னை, கொய்யா, சப்போட்டா, மாதுளை இவற்றில் மட்டுமல்லாமல் பாக்கு, கொக்கோ, எலுமிச்சை, மிளகாய் பயிரில் நல்ல பலன் தரும். பஞ்சகவ்யா லிட்டர் 150 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விற்கப்படுகிறது. ரசாயன வேளாண்மை செய்த இடத்திலும் உருப்படியான நன்மைகள் உள்ளதால் இன்றே அதற்கு திட்டம் இட வேண்டும். தொடர்புக்கு 98420 07125.- டாக்டர்.பா.இளங்கோவன்வேளாண் துணை இயக்குனர், தேனி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !