மா மரங்களில் பூச்சிக் கட்டுப்பாடு
பழங்களின் அரசன் மாம்பழம் என போற்றப்படுகிறது. மாமரங்கள் டிசம்பரில் ஆரம்பித்து மார்ச் வரை பூக்கும். இக்காலகட்டத்தில் மாமரங்களைத் தாக்கும் பூச்சிகளை கண்டறிந்து அழித்தால் விளைச்சல் அதிகரிக்கும்.தத்துப்பூச்சிகள்மாமரம் பூக்கும் காலத்தில் தத்துப்பூச்சிகள் பூங்கொத்துகளில் முட்டைகளை இடுகிறது. பிஞ்சுகள் பிடித்தாலும் சிறு கடுகளவு உள்ள பிஞ்சுகள் உதிர்ந்து விடும். இப்பூச்சியைக் கட்டுப்படுத்த அசிபேட் என்ற மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு கிராம் என்ற வீதத்தில் அல்லது பாசலோன் என்ற மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் 1.5 மி.லி., என்ற வீதத்திலும், மரம் பூக்க ஆரம்பித்ததில் இருந்து 15 நாள் இடைவெளியில் 2 முதல் 3 முறை தெளிக்க வேண்டும்.பூங்கொத்துப் புழுபூங்கொத்துப் புழு மாமரங்களை பூக்கும் நேரங்களில் பூங்கொத்துகளில் கூடுபோல் கட்டிக் கொண்டு உள்ளே இருந்து பழங்களையும், மொட்டுகளையும் தின்று சேதம் விளைவிக்கும். இதை தடுக்க காராபரில் எனும் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் என்ற அளவில் கலந்து பூக்கள் நனையும்படி நன்றாக தெளிக்க வேண்டும்.சாறு உறிஞ்சும் பூச்சிகள்மாமரங்களில் சாறு உறிஞ்சும் பூச்சிகளான அசுவினி, செதில் பூச்சி, மாவுப்பூச்சி ஆகியவை இலைகள், கிளைகள், பூங்கொத்து, மொட்டுகளில் உள்ள சாற்றினை உறிஞ்சிக் குடிக்கின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த டைமீத்தோயேட் அல்லது மீத்தைல் டெமட்டான் என்ற மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2.5 மி.லி என்ற வீதத்தில் கலந்து தெளிக்கலாம்.பழ ஈபழ ஈக்கள் வெளிர் மஞ்சள் நிறத்தில் வீட்டு ஈக்கள் போலவே இருக்கும். முதிர்ந்த காய்கள் மீது இந்த ஈக்கள் முட்டையை காய்களின் தோலில் இட்டு விடும். பிறகு அம்முட்டைகளில் இருந்து வெளிவரும் புழுக்கள் பழத்தின் சதைப் பகுதியை துளைத்து உண்டு வளரும். இதனால் பழம் முழுவதும் அழுகி மரத்தில் இருந்து கீழே உதிர்ந்து விடும். காய்கள் முதிரும் காலத்தில் மாலத்தியான் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 3 -- 4 மி.லி., வீதம் கலந்து தெளித்து பழ ஈக்களை கட்டுப்படுத்தலாம்.மாங்கொட்டை வண்டுஇதை மாங்கொட்டை துளைப்பான் எனவும் கூறுவர். மரங்கள் காய்க்க ஆரம்பமாகும் தருணத்தில் இருந்து கோலி குண்டு அளவுள்ள காய்கள் முதல் முக்கால் பாகம் முதிர்ச்சி அடைந்த காய்கள் வரை இவ்வண்டுகள் காய்களின் மேல் முட்டையை இட்டு அவற்றின் மீது ஒரு வகையான கருமை நிற திரவத்தால் மூடி விடுகின்றன. இம்முட்டைகள் பொரிந்தவுடன் இதிலிருந்து வெளி வரும் காலில்லா புழுக்கள் காயை துளைத்து சாப்பிட்டு வளர்கின்றன. ஆகஸ்ட் மாதங்களில் மரப்பட்டையில் உள்ள கருப்பு நிற கூண் வண்டுகளை லேம்டாசைக்ளோதிரின் என்ற மருந்தை ஒரு மி.லி., எடுத்து ஒரு லிட்டர் தண்ணீர் என்ற வீதத்தில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம். தொடர்புக்கு 94425 42476.முனைவர். மா. விஷ்ணுப்பிரியாஉதவி பேராசிரியர்சேதுபாஸ்கரா வேளாண் கல்லுாரி, காரைக்குடி.