மூங்கில் தடைச்சட்டம் ரத்து
மத்திய வனச்சட்டம் 1927ன் படி மூங்கில் தடை சட்டம் நடைமுறையில் இருந்தது. தமிழகத்தில் மூங்கில் பொருட்கள் தயாரிப்பு கைவினைஞர்கள் பாதிக்கப்பட்டனர். தற்போது மத்திய அரசு ஒரு அவசர சட்டம் மூலம் இதை ரத்து செய்துள்ளது. இதை பல தரப்பினரும் வரவேற்கின்றனர். தமிழக கிராம மக்கள் மூங்கிலை கொண்டு தொழில் செய்வோர், மலை வாழ் மக்கள் மூங்கில் மூலம் கூடை, பர்னிச்சர், தொட்டில், அலங்காரப் பொருட்களை செய்து, வாங்கி விற்றும் தொழில் செய்து வருகின்றனர். பலர் மூங்கில் சாகுபடியை கைவிட்ட காரணத்தாலும், மூங்கில் மர எண்ணிக்கை குறைந்ததாலும் வனப்பகுதி பாதுகாப்பு என்ற பெயரில் மத்திய அரசு மூங்கில் குச்சிகளை வெட்ட தடை விதித்தது. புதிய செடிகள் நடவும் அனுமதி மறுத்தனர்.மூங்கில் தொழில் என்றால் பிரம்பு, மூங்கில் போன்ற வகைகளும் அடக்கம். இவற்றை கொண்டு பல பொருட்களை தயாரித்து பிழைத்து வந்தவர்கள் திகைத்தனர். தொழில் நசியத் தொடங்கியது. இதனால் பிளாஸ்டிக் சேர்கள், பொருட்கள், அந்த இடத்தை பிடித்தன. இத்தடையை தமிழகத்தில் தீவிரமாக நடைமுறை செய்தனர். பிற மாநிலங்கள் இதை நடைமுறைப்படுத்தவில்லை. இதனால் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு மூங்கில்கள் கொண்டு வரப்பட்டு பொருட்கள் தயாரிக்கப்பட்டன. மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாலும், வறட்சியிலும் மூங்கில் விரைவில் வளரும் மரம் என்பதாலும், சுற்றுச்சூழலை மாசடைய செய்யும் பிளாஸ்டிக் பொருட்களை உபயோகத்தை குறைப்பதற்காகவும் மூங்கில் பொருள் தயாரிக்கும் தொழிலுக்கு மத்திய அரசு பச்சைக்கொடி காட்டியது. மூங்கில் தடை சட்டத்தையும் ரத்து செய்தது. எனவே, தனியார் நிலங்களில் மூங்கில் வளர்த்து அதிக லாபம் பெறலாம். வனத்துறை மூலம் காட்டு மூங்கில்களையும் விலைக்கு வாங்கி தொழில் செய்யலாம். தொடர்புக்கு 93807 55629.- எம்.ஞானசேகர்விவசாய தொழில் ஆலோசகர் சென்னை.