சின்னச்சின்ன செய்திகள்
சோளத்தில் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள்:சோளமாவு: ரொட்டி தயாரிக்கும் மற்ற தானியங்களின் மாவோடு கலந்து பயன்படுத்தப்படுகிறது. 70 சதவீதம் கோதுமை மாவு, 20 சதவீதம் தோலுரிக்கப்பட்ட சோள மாவு, 10 சத வீதம் சோயா மாவு ஆகியவை கலந்து பிஸ்கட் தயாரிக்கப்படுகிறது. இவ்வாறு தயாரிக்கப்படும் அடுமனை (பேக்கரி) 47 சதவீதம் புரதமும், 8.3 மடங்கு அதிக அளவு நார்ச்சத்தும் 58.98 சதவீதம் தாது உப்புக்களும் நிறைந்து சாதாரண பிஸ்கட்டுகளை காட்டிலும் ஊட்டச்சத்தில் உயர்ந்துள்ளது.சோள ரொட்டி: சோளமாவு 150 கிராம், சர்க்கரை 50கி, ஈஸ்ட் 10கி, மைதா 100கி, நீர், பால் தேவையான அளவு கொழுப்பு 10மி.லி, உப்பு - தேவையான அளவு.செய்முறை: சோளமாவு, மைதாவை சலித்து, ஈஸ்ட், சர்க்கரை, உப்பு, கொழுப்பு சேர்க்கவும். மேலும் நீர், பால் சேர்த்து மிருதுவாக பிசைந்து ஐந்திலிருந்து 6 மணி நேரம் வரை ஊறவிடவும். பின் ரொட்டி மோல்டுகளில் போட்டு 100-110 டிகிரி செ. வெப்பநிலையில் 10 நிமிடம் வைத்து ஆறியவுடன் துண்டுகளாக்கவும்.சோளமாவு கேக் செய்ய தேவையான பொருட்கள்: சோளமாவு 250 கிராம், சர்க்கரை 300கி, வனஸ்பதி 200கி, முட்டை-5, பால்-75 மி.லி., பேக்கிங் பவுடர்-0.5கி, வெனிலா எசன்ஸ் சில துளிகள், உப்பு - 1 டீ ஸ்பூன்.செய்முறை: மாவை பேக்கிங் பொருளுடன் சேர்த்து கலக்கவும். பொடியாக்கிய சர்க்கரை, வனஸ்பதி சேர்த்து நன்கு கலக்கவும். முட்டையை நன்கு நுரைக்க அடிக்கவும். வெனிலா எசன்சை முட்டையில் ஊற்றி கலக்கவும். இதனை சர்க்கரை, வனஸ்பதியுடன் சேர்க்கவும். பின் மாவைச் சேர்த்து நன்கு கலக்கவும். பால் தேவை என்றால் சேர்த்து இட்லிமாவு பதத்திற்கு கொண்டுவரவும். இதனை வனஸ்பதி தடவிய கேக் பாத்திரங்களில் ஊற்றி 210 டிகிரி செ. வெப்பநிலையில் 25-30 நிமிடங்கள் வரை வைக்கவும். (தகவல்: முனைவர் ப.சீதா, முனைவர் க.சசிதேவி, முனைவர் ஆர்.மாலதி, அறுவடை பின்னர் தொழில்நுட்ப மையம், வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், த.வே.பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641 003. போன்: 0422-661 1268)வட மிளகாய்: காய்கள் மேற்புறம் அகன்றும் கீழ்புறம் குறுகியும் தலைகீழாக உள்ள முக்கோணம் மாதிரி தோன்றும். வெளிர்பச்சை நிறமாக இருக்கும். இது பாரம்பரிய ரகம். ஒரிஜினல் மோர்மிளகாய். இதைத் தான் வடமிளகாய் என்று இங்கு அழைக்கிறார்கள். பொதுவாக கன்னியாகுமரி மாவட்டத்தில் அண்ணனை வடமிளகாய் முருகன் என்றுதான் அழைப்பார்கள் என்கிறார் தம்பி முத்துகிருஷ்ணன். விவசாயி. வடமிளகாய் விவசாயத்தில் இவர்கள் பேமஸ். முகவரி: முத்துகிருஷ்ணன், திருவம்புதனபுரம், ராதாபுரம் (வழி) திருநெல்வேலி மாவட்டம்-627 130. 94434 87823. இந்த மிளகாயில் உரைப்பு கம்மி. பஜ்ஜி மிளகாய் அளவிற்கு உரைப்பு இருக்கும். விலை ரூ.40/-கிலோ (அதிக பட்சம்). ரூ.6/கிலோ (குறைந்தபட்ச விலை). ஒரு வருடத்திற்கு காய் எடுக்கலாம். நாற்று 45 நாள். 15வது நாளில் பூ. 45வது நாளில் காய் பறிக்கலாம். வாரம் ஒரு முறை பறிக்கலாம்.ஒரு ஏக்கர் - வரவு/செலவு: ரூ.உழவு- 600விதை நாற்று - சொந்தம்நடவு - 600தொழு உரம் - 3000ரசாயன உரம் - 15,000பூச்சி மருந்து - 20,000களை - 1000பறிகளை - 4,000மொத்த செலவு - 44,200நிகர வருமானம் - 80,000மேலும் விபரங்களுக்கு: முத்துகிருஷ்ணன், விவசாயி, 94434 87823, 86954 53003, சென்னை.-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்