சின்னச்சின்ன செய்திகள்
தக்காளி ஒட்டு ரகங்கள்: கோ.டி.எச்2 - தக்காளி இலைச்சுருட்டை நோய் எதிர்ப்புத்திறன் கொண்டது. கோ.டி.எச்3 - தக்காளி இலைச்சுருட்டை அல்லது நூற்புழு எதிர்ப்புத்திறன் கொண்டது. தரமான நாற்று உற்பத்திக்கான சமுதாய நாற்றங்கால்நிழல் வலைக்குடில்: வெண்கலன் (95 குழிகள் கொண்டது) 240 எண்ணிக்கை/எக்டர். வளர் ஊடகம் - தென்னை நார்க்கழிவு 300 கி + 5 கி வேப்பம்புண்ணாக்கு + நிலையில் / விதைத்த (அ) பாஸ்போ பாக்டீரியா ஒவ்வொன்றும் (1கி) நாற்றங்கால் நிலையில்/ விதைத்த 15 நாட்களுக்குப் பின் தெளித்த 19:19:19 + நுண்ணூட்டச்சத்து கலவை (அ) 0.5 சதவீதம். நடவு நாற்று எண்ணிக்கை பராமரித்தல்: 120 செ.மீ. அகலமும், வசதியான அளவு நீளமும் கொண்ட மேட்டுப்பாத்திகளில் நடவேண்டும். நாற்று எண்ணிக்கை 23,334/எக்டர் இருக்குமாறு இரட்டை வரிசையில் 90 து 60 து 60 செ.மீ. இடைவெளியில் நடவேண்டும்.சொட்டுநீர் உரப்பாசனம் (அ) மூடாக்கு போடுதல்: சொட்டுநீர் பாசனக் கருவியை அமைத்து பக்கவாட்டு குழாய்களை பாத்தியின் நடுவில் இடவேண்டும். தண்ணீரில் கரையும் உரங்கள் (அ) 200:250:250 கிகி தழை, மணி, சாம்பல் சத்து/ எக்டர் உரப்பாசனம் மூலம்.குண்டுமல்லி ஏற்றுமதிக்கான பெட்டகப்படுத்தும் தொழில்நுட்பம்: குண்டுமல்லிமலர்களை ஏற்றுமதி செய்வதற்கு உகந்த பெட்டகப்படுத்தும் முறை உருவாக்கப்பட்டுள்ளது. நன்கு முற்றிய விரியாத மலர்களை அதிகாலை 7 மணிக்கு முன்னரே பறிக்க வேண்டும். பின் இம்மொட்டுக்கள் உடனடியாக ஏற்றுமதி நிலையத்திற்கு மதிப்புக் கூட்டலுக்காக கொண்டுவரப்படுகின்றன.தொலைதூர சந்தைகளுக்கு மலர் மொட்டுக்கள் சரமாக கட்டப் படுகின்றன. அவை 4 சதம் போரிக் அமிலத்தில் நனைக்கப்பட்டு, பின் அவை 30 செ.மீ. நீளத்திற்கு துண்டுகளாக்கப்பட்டு, 5 துண்டுகளாக சிறிய 11து35து4 செ.மீ. அளவுள்ள அலுமினியம் அடித்தளம் கொண்ட அட்டைப் பெட்டியினுள் காகிதத்தின் உதவியுடன் தெர்மோகோல் பெட்டியினுள் 3 அடுக்குகளாகவும் அவற்றின் இடையே மற்றொரு அடுக்கை ஐஸ்ஸெல் கொண்ட தாளையும் வைக்க வேண்டும். பின்னர் பெட்டியை மூடி ஒட்டுநாடாவால் ஒட்டவேண்டும். இத்தொழில்நுட்பம் மூலம் மல்லிகை மலர்கள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.துபாய் போன்ற அண்டைநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு 210 செ.மீ. நீளம் கொண்ட மல்லிகை சரங்களை 4 சதவீத போரிக் அமிலத்தில் நனைத்து பட்டர் பேப்பர் அடித்தளத்துடன் காற்றோட்டத்திற்கான ஓட்டைகள் கொண்ட அட்டைப்பெட்டியினுள் வைத்தும் பெட்டகப் படுத்தப்படுகின்றன. இந்த தொழில்நுட்பத்தின் மூலம் அறுவடைக்குப் பின்தான் மல்லிகை மலர் சேதத்தை 40 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாகக் குறைக்கலாம். மேலும் மலர்கள் 72 மணி நேரம் வாடாமல் பாதுகாக்கப் படுகின்றன. சாதாரண முறையில் இது எடை, அளவு குறைகிறது. இதனால் ஏற்றுமதியாளர்கள் அதிக லாபம் பெறலாம். (தகவல்: த.வே.ப.கழகத்தின் உழவர் பெருவிழா கையேடு 2013)-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்