சின்ன சின்ன செய்திகள்
தானியங்களில் உமியை அகற்றும் புதிய கருவி: இந்தியாவில் அதிக அளவில் சிறுதானியங்கள் பயிரிடப்பட்டு அறுவடைக்குப்பின் சிறந்த முறையில் பதப்படுத்த சீரிய இயந்திரங்கள் இதுவரை இல்லாத காரணத்தினால் இதன் பயன்பாடும் வெகுவாக குறைந்து விட்டது. பொதுவாக தினை, சாமை, வரகு பனிவரகு, குதிரைவாலி போன்ற தானியங்கள் அளவில் மிகவும் சிறியதாக இருப்பதால் இவற்றை கையாள்வது மிகவும் சிரமமாக உள்ளது. இவ்வகை தானியங்களில் சுமார் 25-30 சதம் உமி இருப்பதால் அப்படியே உணவில் சேர்த்துக் கொள்ள முடிவதில்லை. இதனை கருத்தில் கொண்டு கோயம்புத்தூரிலுள்ள மத்திய வேளாண்மை பொறியியல் மண்டல ஆராய்ச்சி நிறுவனம் சிறுதானியங்களை உடைத்து உமி தவிட்டை முற்றிலுமாக அகற்றுவதற்கு புதியதொரு இயந்திரம் CIAE Millet மில்லை உருவாக்கியுள்ளது.இதில் அனைத்து சிறுதானியங்களையும் ஒரே இயந்திரத்தில் முதல்முறை செலுத்தும் போதே (சிங்கிள் பேஸ்) 95 சதவீத உமி தவிட்டை சுத்தமாக நீக்கும். மொத்த எடை 120 கிலோ கொண்ட சிஐஏஇ சிறுதானிய அரவை மில்லில் குறைந்த அளவு அதாவது 100 கிராம் முதல், ஒரு மணி நேரத்திற்கு 100 கிலோ வரை சிறந்த முறையில் உமி நீக்கம் செய்ய முடியும். வீட்டில் உள்ள பெண்கள் கூட இதை எளிதில் கையாள முடியும். இந்த இயந்திரம் வேலை செய்யும் போது அதிக ஓசை வராது. தூசு, உமிகளை வைத்து சுற்றுச்சூழல் மாசடைவதைத் தடுக்க சைக்லோன் பிரிப் பான் பொருத்தப்பட்டுள் ளது. ஒரு குதிரை திறன் கொண்ட மின்மோட்டாரில் இயங்கும். CIAE Millet மில்லை இயக்க சிங்கிள் பேஸ் மின்சாரம் போதுமானது. (தகவல்: முனைவர் சி.பாலசுப்பிரமணியன், முதன்மை விஞ்ஞானி, மண்டல அலுவலகம், மத்திய வேளாண்மை பொறியியல் நிறுவனம், கோயம்புத்தூர்-641 003. போன்: 086810 17811)வனத்துறை மரக்கன்றுகளை இலவசமாக நடவு செய்து தருகிறது: இது பற்றி தமிழக வனத்துறையின் கூடுதல் முதன்மை வனப்பாதுகாவலர் இருளாண்டி கூறுவது. தமிழக அரசு ஜப்பான் நாட்டின் உதவியுடன் தனியார் தரிசு நிலங்களில் நிலம் வளர்க்கும் திட்டமும், மரம் வளர்க்கும் திட்டமும் தமிழகம் முழுவதும் சுமார் 6 ஆயிரம் முதல் 8 ஆயிரம் கிராமங்களைத் தேர்வு செய்து 3 கோடி மரக்கன்றுகள் நடவு செய்வதற்கு திட்டம் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் தங்களது தரிசு நிலங்களில் மரக்கன்றுகள் வளர்க்கலாம்.இதற்கான வனத்துறை சார்பாக தேக்கு பீதனக்கன், பீநாரி, குமிழ், வேம்பு, மகோகனி, வாகை, வேங்கை ஆகிய மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் இணைய விரும்பும் விவசாயிகளை அந்தந்த மாவட்ட வன விரிவாக்க மையங்களைத் தொடர்பு கொண்டு பட்டா, சிட்டா அடங்கல், மார்பளவு புகைப்படம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். ஒரு ஏக்கர் 200 மரக்கன்றுகள் வரை நடவு செய்யலாம். 3 வருடங்கள் வரை நல்ல முறையில் பராமரிக்க விவசாயிகளுக்கு மரம் ஒன்றுக்கு 5 ரூபாய் வீதம் 1000 ரூபாய் வரை ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் 32 மாவட்ட வன விரிவாக்க மையங்களில் இந்தப்பணி செவ்வனே நடைபெற்று வருகிறது.AGRITEAT 2014 : தென்னிந்தியாவில் மாபெரும் விவசாயக் கண்காட்சி ஜூன் 19,20,21,22 தேதிகளில், மதுரை தமுக்கம் மைதானம், மதுரை. தொடர்புக்கு The Chairman, United Trade fairs India Pvt Ltd, 1A கஸ்தூரிபாய் வீதி, கணபதி, கோயம்புத்தூர் -641 006. செல்: +9193600 93603. போன்: 0422 - 322 8111.- டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.வனத்துறை மண்டல அலுவலர், முகவரி மற்றும் தொலைபேசி எண்கள்:தலைமை வனப்பாதுகாவலர் (ஆராய்ச்சி) மண்டலம், கொளம்பாக்கம், சென்னை. - 044 - 2275 1465வனப்பாதுகாவலர், கோவை மண்டலம், கோவை. - 0422- 245 3114வனப்பாதுகாவலர், மதுரை மண்டலம், மதுரை. - 0452 - 241 2114வனப்பாதுவலர், திருச்சி மண்டலம், திருச்சி. - 0431 - 246 0010வனப்பாதுகாவலர், திண்டுக்கல் மண்டலம், திண்டுக்கல். - 0451- 242 0916வனப்பாதுகாவலர், தர்மபுரி மண்டலம், தர்மபுரி. - 04342 - 231 043வனப்பாதுகாவலர், ஈரோடு மண்டலம், ஈரோடு. - 0424 - 229 1876வனப்பாதுகாவலர், சேலம் மண்டலம், சேலம். - 0427 - 241 2114வனப்பாதுகாவலர், விருதுநகர் மண்டலம், விருதுநகர். - 04562 - 252 158