உள்ளூர் செய்திகள்

சின்னச்சின்ன செய்திகள்

சவுக்கு சாகுபடி: ஒரு காலத்தில் கடற்கரை பகுதிகள், அதிக மணற்பாங்கான பகுதிகள், தரிசுநிலங்கள் போன்ற இடங்களில் மட்டும்தான் சவுக்கு சாகுபடி செய்யப்பட்டு வந்தது. சமீபகாலமாக அனைத்து பயிர்கள் சாகுபடி செய்யும் பரப்புகளிலும் இடம்பிடிக்க ஆரம்பித்துவிட்டது சவுக்கு. புதுக்கோட்டை மாவட்டம் பாரதிபுரம் விவசாயி தளபதி (94435 93339) இறவையில் 20 ஏக்கர் சவுக்கு மரம் சாகுபடி செய்துள்ளார். இன்னும் 10 ஏக்கருக்கு நடவு செய்ய உள்ளார். 4 அடிக்கு 4 அடி இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். 1 ஏக்கருக்கு 4000 கன்றுகள் (ஜிங்கினியானா ரகம்) தேவைப்படும். ஒரு அடி நீள, அகல, ஆழமுள்ள குழிகளை எடுத்து அதில் தொழு உரம், மண்புழு உரங்களை இட்டு நடவு செய்ய வேண்டும். முதல் 2 வருடமும் தவறாமல் கவாத்து செய்ய வேண்டும். மூன்றரை வருடத்திற்கு மேல் டிமாண்டைப் பொறுத்து மரத்தை வெட்டி விற்றுவிடலாம். 1 ஏக்கருக்கு சராசரியாக 50 டன் மகசூல் எடுக்கிறார். எல்லா செலவும் போக ஒரு ஏக்கரில் ஒரு லட்சம் ரூபாய்க்கு குறையாமல் லாபம் கிடைக்கிறது என்று தெரிவிக்கிறார் விவசாயி. (பசுமை விகடன், 25.2.11)விதை முதல் நாற்று விற்பனை வரை நிழல் வலையங்கள் அடிப்படையில் அமைப்பதற்கு தொடர்பு முகவரி: ''டோட்டல் அக்ரோ வெட்கேர், 86, நர்சரி கார்டன், குளூர், கொமரெளி வலசு, மொடக்குறிச்சி, ஈரோடு-638 109. மொபைல்: 99945 74445 / 94436 83410.வண்ண மீன்கள் வாங்க தொடர்பு முகவரி: கிங் அக்வாடிக், வீரமைந்தன், மேற்கு மாடவீதி, பாடசாலை தெரு, கொளத்தூர், சென்னை-99. மொபைல்: 98844 21155/ 97909 49361.பருத்தி விதை இருப்பு நிலவரம்: பருத்தி ஆராய்ச்சி நிலையம், ஸ்ரீவில்லிபுத்தூர், 04563-260 736-ஐ தொடர்புகொண்டு கீழ்க்கண்ட விதைகளை விலைக்கு வாங்கலாம்.பருத்தி எஸ்.வி.பி.ஆர்.2 (உண்மை நிலை விதை) ரூ.75/ கிலோ), பருத்தி எஸ்.வி.பி.ஆர்.2 (வல்லுனர் விதை) விலை ரூ.150. பருத்தி எஸ்.வி.பி.ஆர்.3 (வல்லுனர் விதை) விலை ரூ.150/- கிலோ. பருத்தி எஸ்.வி.பி.ஆர்.4 (உண்மை நிலை விதை) ரூ.75/- கிலோ.செங்காந்தள் மலர் என்று அழைக்கப்படும் மூலிகைத்தாவரம் தமிழகத்தில் மூலனூர், திருப்பூர், ஒட்டன்சத்திரம், அம்பிளிக்கை, மார்க்கம்பட்டி, ஜெயம்கொண்டான், வேதாரண்யம் ஆகிய பகுதிகளில் பயிரிடப் படுகிறது. இப்பயிரை இனக்கருகல் நோய் அதிகளவில் தாக்கி சேதத்தை விளைவிக்கிறது. இந்நோயை உண்டாக்கும் நோய்காரணிகள்: கர்வுலேரியா மற்றும் ஆல்டெரியாவாகும்.கர்வுலேரியா தாக்கிய இலைகளில் குறுகிய நீள் முட்டை வடிவ புள்ளிகள் தோன்றி நாளடைவில் புள்ளிகள் பெரிதாகி இலைப்பரப்பை ஆக்கிரமித்து பின் இலைகள் கருகி காய்ந்துவிடும். ஆல்டெரியா தாக்கிய இலையின் புள்ளிகள் வளை யங்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்தது போல் காணப்படும். நாளடைவில் இலைகள் கருகி காய்ந்துவிடும்.இந்நோயைக் கட்டுப்படுத்த: கீழே விழுந்த காய்ந்த இலைகளை சேகரித்து அப்புறப் படுத்துதல், டைத்தேன் எம்45 (2 கிராம்/லிட்டர் தண்ணீர்) அல்லது ஹெக்கா கோனஜோல் (1 கிராம்/லிட்டர்) அல்லது புரோப்பிகோன ஜோல் (1 கிராம்/லிட்டர் தண்ணீர்) தெளித்தல் ஆகியவை பலன்தரும். நோயின் தீவிரத்தைப் பொறுத்து 2-3 முறை தெளிக்கலாம். (தகவல்: சி.வனிதா, ஜி.சந்திரசேகர், க.ராஜாமணி, பயிர் நோயியல் துறை, த.வே.பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641 003. 96777 39126)-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !