உள்ளூர் செய்திகள்

சின்னச்சின்ன செய்திகள்

த.வே.ப.க. சவுக்கு 'எம்.டி.பி.2' - இந்த புதிய ரக சவுக்கு மரம் சமீபத்தில் வெளியிடப்பட்டது. எக்டருக்கு 125-150 டன் விளைச்சல் கொண்டது. வயது 36 மாதங்கள். அதிக அளவு விளைச்சலாக எக்டருக்கு 165 டன் கொடுக்கிறது. பருவம்: ஆண்டு முழுவதும் (பாசன வசதி இருப்பின்)சிறப்பியல்புகள்: அதிக விளைச்சல், குறுகிய காலத்தில் அறுவடை, காகிதம், முட்டுக்கட்டை, உயிரி எரிபொருளாக பயன்பாடு.உருவாக்கம்: விதையில்லா இனப்பெருக்க முறையில் ஈக்குவிஸ்டிபோலியா மற்றும் ஜீங்குனியாவில் இயற்கையாக உருவான வீரிய ஒட்டிலிருந்து தேர்வு.மேலும் விபரங்களுக்கு: முதன்மையர், வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மேட்டுப்பாளையம்-641 301. போன்: 04254-225 064.புது ரக காய்கறித் தட்டைப்பயறு 'பி.கே.எம்.1' - தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள இந்த ரகம் காய்கறி தட்டையாக எக்டருக்கு 25 டன் கொடுக்கக்கூடியது. வயது 90-100 நாட்கள்.பருவம்-ஆடிப்பட்டம் மற்றும் தைப்பட்டம். உருவாக்கம்: கன்னியாகுமரி பகுதியில் உள்ள வகையிலிருந்து தனி வழி தேர்வு.சிறப்பியல்புகள்: அதிக விளைச்சல், மிக நீளமான காய்கள், 40 முதல் 45 செ.மீ., கொத்தாக காய்க்கும் திறன் (ஒரு கொத்துக்கு 3 முதல் 4 காய்கள்). மித அடர்வு தன்மையுடன் அதிக கிளைகள், விதைகள், சிவப்பு கலந்த பழுப்பு நிறம், முதல் அறுவடை 45 முதல் 50வது நாள், நார்ச்சத்து 0.89 கிராம்; புரதம் 21.88 மி.கி, / கிலோ.பயிரிட உகந்த மாவட்டங்கள்: நாகர்கோவில், சேலம், திருச்சி, தேனி, பெரம்பலூர், திருவள்ளூர், அரியலூர், மதுரை, திண்டுக்கல் மற்றும் கடலூர். மேலும் விபரங்களுக்கு: முதன்மையர், தோட்டக் கலைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பெரியகுளம்-625 604. போன்: 04546-231 726.'அர்ஜுனா' அரசானிக்காய்: தாய்லாந்து நிறுவனத்தின் எப்1 ஹைபிரிடு விதைகள் ஈஸ்ட்வெஸ்ட் நிறுவனம் வழங்குகிறது. அனுபவ விவசாயி சிவன்மலைச்சாமி, த/பெ.குமாரசாமி கவுண்டர், சி.அர்த்தநாரிபாளையம், ஆர்.பொன்னாபுரம் அஞ்சல், பொள்ளாச்சி-2, மொபைல்: 94421 61242. ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் 10 ஏக்கர் அளவில் பயிர் செய்கிறார். கேரளாவில் ஓணம் பண்டிகைக்கு பயிர் அறுவடைக்கு வரும்பொழுது நல்ல விலை கிடைக்கும் என்கிறார். விதைத்த நாளிலிருந்து முதல் பறிப்பு 65 முதல் 75 நாளில் ஆரம்பித்து 8-10 நாட்களுக்கு ஒரு முறை என பறிப்பு செய்யப்படுகிறது. மகசூல் அதிகபட்சமாக 15 டன் / எக்டர். சராசரி மகசூல் 12 டன் அதிகபட்சமாக கிலோ ரூ.10/-க்கு விற்றுள்ளார். மிகக்குறைந்த விலையாக கிலோ 55 பைசாவிற்கும் விற்றுள்ளார். மேலும் விபரங்களுக்கு: கார்த்திகேயன், மண்டல மேலாளர், ஈஸ்ட்வெஸ்ட் சீட்ஸ் இந்தியா பி.லிட்., மொபைல்: 96552 38393.ஜெர்கின் சின்ன வெள்ளரியை வெற்றிகரமாக பயிர்செய்து ஏக்கருக்கு சுமார் ரூ.30,000 வரை லாபம் பெரும் அனுபவ விவசாயி ச.மச்சக்காளை, த/பெ.சடையன், முளையூர் போஸ்ட், நத்தம் தாலுகா, திண்டுக்கல்-624 401, மொபைல்: 99528 05366. வெள்ளரி குறித்த விபரங்களுக்கு: வெள்ளைச்சாமி, பின்னான் அக்ரோ நிறுவனம்,மொபைல்: 96556 90253, 96550 17047.-டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !