உள்ளூர் செய்திகள்

கரும்பு விவசாயத்தில் வறட்சியை சமாளிக்க...

கரும்பு வெட்டியவுடன் சருகை அப்படியே விட்டுவிடுவதால் தரையில் ஈரம் காக்கப்படுகிறது. இதனால் கட்டைப்பயிர் செய்வதில் பயிர் கிடைப்பதில் எந்த சிரமமும் ஏற்படுவதில்லை. களிமண், கரிசல் (அ) வண்டல் மண்ணாக இருந்தால் மாதம் ஒரு தண்ணீரும், மணற்பாங்கான மண்ணாக இருந்தால் 20 நாட்களுக்கு ஒரு தண்ணீரும் விட்டால் போதும். சருகுக்கு கீழே பார்த்தால் எப்போதும் மண் பொலபொலப்பாகவே இருக்கும். இதில் களை கட்டுப்பாடு சிறப்பாக இருக்கும். களை கட்டுப்படுவதால் நிலத்தில் சத்து விரயமாவதில்லை. களைவெட்டு, கொத்து கொத்துதல், இடை உழவு செய்வது, மண் அணைப்பது போன்ற வேலைகள் இல்லை. இதனால் ஏக்கருக்கு ரூ.10,000 மிச்சமாகும்.ஆள் பற்றாக்குறை தவிர்க்கப்படுகிறது. கரன்ட் தட்டுப்பாடு பாதிப்பில்லை. குருத்துப்பூச்சி பாதிப்பில்லை. இடைக்கணுப்புழு பாதிப்பில்லை. பெரும் வெடிப்புகள் ஏற்படுவதில்லை. இதனால் வேர் அறுபடாததால் கரும்பின் வளர்ச்சி பாதிக்கப்படுவதில்லை. தண்ணீர் சற்று உவர் நீராக இருந்தாலும் அதிக தண்ணீர் பாயாததால் மண் உப்பாவதில்லை. நிலத்தடி நீர் பாதுகாக்கப்படுகிறது. மழை பெய்தது போக வருடத்திற்கு 8 முறை தண்ணீர் கட்டினால் போதும். சருகு மக்குவதால் இயற்கை எருவும் கிடைக்கிறது. மொத்தத்தில் இதனால் விவசாயிகளுக்கு நிம்மதி கிடைக்கிறது.பாதுகாப்பு தேவை: தீ படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சருகு எரியும்போது பயிரும் எரிந்துவிடும். உரம் போடும்போது சருகை நீக்கிவிட்டு தரையில்தான் போடவேண்டும். அப்போதுதான் தண்ணீரில் கரைந்து பயிருக்கு கிடைக்கும். சருகின் மேலேயே போட்டால் பயிருக்கு எந்தப்பலனும் கிடைக்காது. எலித்தொல்லை ஏற்படும். இதற்கு போரேட் மருந்தை அந்தந்த இடத்தில் தூவிவிட்டால் தண்ணீர் கரைந்திருக்கும்போது எலி, பாம்பு போன்றவை அழிந்துவிடுகின்றன. -சி.முருகேசன், அங்கனூர், 94454 13652.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !