உள்ளூர் செய்திகள்

கோடை பசுந்தீவனம் முளைப்பாரி

திருவிழா காலங்களில் முளைப்பாரி எடுத்து சென்று ஆற்றில் இடுவது வழக்கம். பல ஆண்டுகளுக்கு முன்பே நமக்கு மூதாதையர் விட்டு சென்று இந்த உத்தி மூலம் நம்மால் பல வித தானியங்களை முளைக்க வைத்து பசுந்தீவனமாக மாற்றலாம்.பற்றாக்குறைறையால் அதிக பரப்பில் சாகுபடி செய்ய இயலாத இடங்களில் மட்டுமல்ல, மாடி வீட்டில் கூட மாடு வளர்க்க இந்த உத்தியை கையாளலாம்.வெள்ளை மக்காச்சோளோளம், ராகி, பார்லி, கோதுமை முதலிய தானியங்களை ஊற வைத்து அவற்றை 'ட்ரே' முறையில் பரப்பிலி பூவாளி வைத்து நீர் தெளித்து 10 நாளில் நாம் தரமான மண் கலக்காத சுத்தமான கால்நடைகள் விரும்பி உண்ணும் பசுந்தீவனங்களை தயாரிக்கலாம்.கால்நடைகள் ஊற வைத்து உணவு வகைகளை விரும்பி உண்ணும்.குறிப்பாக ஊற வைத்த பருத்தி கொட்டை மட்டுமல்ல, கொண்டைக்கடலை பயறு வகைகள், பாசிப்பயறு, உளுந்து, சோயா மொச்சை, எண்ணெய் வித்துக்களை ஊற வைத்து உணவில் கலந்து தரும்போது நிறைவான பால் வரவுக்கு வழி வகுக்கிறது.ஆடு, கோழிககளும் விரும்பி உண்ணும்.தொடர்புக்கு 98420 07125.- டாக்டர் பா.இளங்கோவன்வேளாண் துணை இயக்குனனர்தேனி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !