சீசன் இல்லாத நேரங்களிலும் தாய்லாந்து மாம்பழம் கிடைக்கும்
தாய்லாந்து இனிப்பு ரக மாம்பழம் சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த விவசாய பட்டம் முடித்த, செடிகள் உற்பத்தி செய்யும்முன்னோடி விவசாயி பி.கிருஷ்ணன் கூறியதாவது:நம்மூர் கோடை வெயில் மற்றும் மழைக்கு ஏற்றவாறு, குளிர் மற்றும் வறட்சியான பிரதேசங்களில் விளையும் பழ மரங்களை சாகுபடி செய்யலாம்.தாய்லாந்து இனிப்பு ரக மாம்பழமும் சாகுபடி செய்துள்ளேன். இது, சீசன் இல்லாத நேரங்களில், கிடைக்கும் மாம்பழ ரகம்.குறிப்பாக, பெரும் பாலான மாம்பழங்கள் பச்சையாகவும், பழங்கள் பழுத்த பிறகு மஞ்சள் நிறத்திலும் மாறும். இந்த தாய்லாந்து இனிப்பு சுவையுடைய மாம்பழம். காய்கள் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருந்து, தங்க நிறத்தில் பழங்களாக மாறும் தன்மைஉடையவை.மாம்பழம் சீசன் ஏப்., முதல் ஜூன் மாத இறுதியில் நிறைவு பெறும். இந்த ரக மாம்பழம் ஆகஸ்ட் மாதம் தான் மகசூல் கிடைக்க துவங்கும். சீசன் இல்லாத நேரங்களில், மாம்பழங்கள் மகசூல் கிடைக்கும் போது, 1 கிலோ 250 ரூபாய் வரையில் விற்பனை செய்ய முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: பி.கிருஷ்ணன்98419 86400