உள்ளூர் செய்திகள்

பயிர்களை அழிக்கும் வயல் புலி

வயல்களில் நன்கு விளைந்து பால் முற்றிய நெற் கதிர்களை தனது கோரப்பற்களால் கடித்து கொத்து கொத்தாக வாயில் கவ்வி எடுத்து செல்லும். அவற்றை சேமித்து வைக்க முன் கூட்டியே வயல்களில் சுரங்கம் அமைத்திருக்கும். அங்கு சேமித்த தானியங்களை பாதுகாப்புடன் வைக்கும் மதி நுட்பம் வயல் எலிகளுக்கு உண்டு. பயிர்களை அழிப்பதால் எலிகளை 'வயல் புலி' என விவசாயிகள் அழைப்பதுண்டு.வயல் புலியை அழிவயல்களின் உயரத்தையும், அகலத்தையும் குறைக்க வேண்டும். வயல்களின் களைச்செடி, புற்களை அகற்ற வேண்டும். வயல்களில் இருக்கும் எலிகளை பிடித்தும், கிட்டி வைத்து பிடித்தும் எலிகளை அழிக்கலாம். எலி பிடிப்பவர்களை வைத்து எலிகளை பிடித்து அழிக்கலாம். நாய், பூனைகளை எலிகளை பிடிக்க பயன்படுத்தலாம். ஆந்தை மற்றும் கோட்டன் போன்ற பறவைகள் எலி பிடிக்க வசதி அளிக்கும் வகையில் ஏக்கருக்கு 10 இடங்களில் 6 அடி உயரம் கொண்ட மட்டை குச்சிகளை வைத்து ஆங்கில எழுத்தில் 'T' வடிவில் நட்டு விட வேண்டும்.எலி இருக்கும் இடத்தில் 5 கிராம் அலுமினியம் பாஸ் பரைடு மாத்திரைகளை 3 வீதம் வலைகளில் போட்டு எலிகளை அழிக்கலாம். புரோமோ டையேடோல் கட்டிகளை ஒரு வலைக்கு ஒன்று என கட்டி வைத்து எலிகளை அழிக்கலாம். ஒரு பங்கு சிங் பாஸ்பைடு 49 பங்கு எண்ணெய்யில் வறுத்து பொறியில் கலந்து வைக்கலாம். 10 சதவீதம் போராட் குருணை இரண்டரை கிராம் மருந்தை 10 லிட்டர் நீரில் கலந்து வளைகளில் ஊற்றி எலிகளை அழிக்கலாம். தொடர்புக்கு 95786 69455.- வி. ரெங்கசாமிமுன்னாள் உதவி வேளாண் அலுவலர், திருச்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !