உள்ளூர் செய்திகள்

செவ்வந்தி

பூவைப் பொறுத்தவரை ஐப்பசி, கார்த்திகை மாதத்தில் செவ்வந்திப் பூவுக்கு தேவை அதிகமாக இருக்கும். நல்ல விலையும் கிடைக்கும். சித்திரையில் செடி நட்டால் ஐப்பசியில் அறுவடை செய்ய முடியும்.மஞ்சள் செவ்வந்தி, வெள்ளை செவ்வந்தி, சின்ன செவ்வந்தி (இதுவும் மஞ்சளாக இருக்கும்) மூன்று வகை உண்டு. நடவு செய்த ஏழு மாதத்தில் அறுப்புக்கு வந்துவிடும். வாரம் ஒரு தடவை வீதம் ஐந்து அல்லது ஆறு முறை பூ எடுக்கலாம். மொத்தம் எட்டு மாத சாகுபடி, ஒரு முறைக்கு 800 கிலோ கிடைக்கும். ஏக்கருக்கு கணக்குப் பார்த்தால் சராசரியாக 4000 முதல் 4500 கிலோ வரை பூ கிடைக்கும். சந்தையில் இருக்கும் பூக்களின் வரத்தைப் பொறுத்து கிலோ பத்து ரூபாயிலிருந்து ஐம்பது ரூபாய் வரை விலைபோகும். சராசரி மகசூல் 4000 கிலோ சராசரி விலை கிலோ 25 ரூபாய் என்று கணக்கு போட்டாலே ஒரு லட்ச ரூபாய் வரை கிடைக்கும்.நிலத்தை நன்கு உழவு செய்து, வெங்காய பாத்திபோல அமைத்து, நாலு விரல் இடைவெளி இருப்பது போல் இரண்டு இரண்டு வேர்களாக வரிசையில் நடவேண்டும். வேர்களை நடும்போது, அடிவேர், நுனிவேர் பார்த்து ஜாக்கிரதையாக நடவேண்டும். அடிவேரைப் பார்த்து நிலத்தில் நடவேண்டும். மாற்றி நடவுசெய்தால் செடிகள் வளராது.நாற்பதுநாள் இடைவெளியில் மொத்தம் 3 தடவை களை எடுக்க வேண்டும். வாரத்திற்கு இரண்டு தடவை தண்ணீர் கொடுக்க வேண்டும். முதல் தடவை களை எடுப்பதற்கு 20 ஆட்களும், அடுத்தடுத்த இரண்டு களைகளுக்கு 15 ஆட்கள் வீதமும் மொத்தம் 50 ஆட்களுக்கு வேலை இருக்கும். களையெடுத்த பிறகு இரண்டு மூடை டிஏபி, இத்துடன் 100 கிலோ கடலைப் பிண்ணாக்கு கொடுக்க வேண்டும்.பூ வெடிக்கும் சமயத்தில் செடி கீழே சாய்வதற்கு வாய்ப்பு இருக்கும். அதைத்தடுக்க, செடிகளுக்கு மண் அணைப்பதோடு, அருகில் சிறு குச்சிகளை நட்டு, அவற்றில் கயிறு மூலம் கட்டிவிடுவது அவசியம். அசுவினி, வெள்ளை ஈ இரண்டும் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதற்கு மோனோகுரோட்டோபாஸ், செவின் பவுடர் ஆகியவற்றைச் சேர்த்து அடிக்க வேண்டும். மழை அதிகமாக இருந்தால் செடிகள் கீழே சாய்ந்துவிடும். எல்லாவற்றையும் சமாளித்து முடித்தால் நல்ல அறுவடைதான்.சித்திரையில் விதைப்பவர்கள் ஊடுபயிராக வெங்காயத்தையும் சேர்த்து விதைப்பார்கள். ஒரு வரிசையில் செவ்வந்தி, அடுத்த வரிசையில் வெங்காயம் என விதைப்பார்கள். 45ம் நாளில் வெங்காயம் அறுவடை ஆகிவிடும். இதன்மூலம் செலவு போக ஏக்கருக்கு 10 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.ஒரு ஏக்கருக்கான செவ்வந்தி சாகுபடிசெலவு - வரவு கணக்கு (ரூபாயில்) விபரம் செலவு வரவுஉழவு 1,500தொழு உரம் 1,200பார் அமைத்தல் 1,000நாற்று (வேர் வெட்டுதல், வேர் நீக்குதல் உட்பட) 1,180தண்ணீர் பாய்ச்சும் கூலி (மாதம்ரூ.1000வீதம் ஏழு மாதத்திற்கு) 7,000நடவு 1,200களை எடுக்க 3,000உரம் இரண்டு தடவை (டிஏபிகடலை புண்ணாக்கு) 2,700பூச்சி மருந்து (தெளிப்புச் செலவு உட்பட) 850இதர செலவுகள் 750பூ விற்பனை மூலம் வரவு 70,000மொத்தம் 20,380 70,000நிகர லாபம் 49,620-அகமது கபீர், தாராபுரம், 93607 48542.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !