தீவன மேலாண்மை கையாண்டால் காடை வளர்ப்பில் லாபம் பார்க்கலாம்
காடை வளர்ப்பில், தீவனம் மற்றும் நீர் மேலாண்மை குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்துார் உழவர் பயிற்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் கே.பிரேமவல்லி கூறியதாவது:காடை வளர்ப்பில் தீவனம் மற்றும் நீர் மேலாண்மை முறைகளை முறையாக கையாண்டால், காடைகளின் நோய் தாக்கம் குறைக்கலாம். கொதிக்க வைத்த தண்ணீரை, ஆறவைத்து காடைகளுக்கு, குடிநீராக கொடுக்க வேண்டும்.ஹைட்ரஜன் பெர் ஆக்சைடு என்னும் கிருமி நாசினி எல்லா இடங்களிலும் கிடைக்க கூடிய கிருமிநாசினியாக உள்ளது. இதை, ஒரு மில்லியை எடுத்து, 10 லிட்டர் நீரில் கலந்து கொடுக்கலாம். கால்நடை மருத்துவர் பரிந்துரைக்கும் சிறந்த கிருமிநாசினியை பயன்படுத்தலாம்.கோலிபாசில்லோசிஸ், அல்ஸரேட்டிவ் எண்டிரைட்டிஸ் என்கிற நுண்ணுயிர் மற்றும் அஸ்பர்ஜில்லோஸிஸ், அப்ளாடக்ஸிகோஸிஸ் என அழைக்கப்படும் பூஞ்சண நச்சு உள்ளிட்ட நோய்கள் வரலாம்.இதை கட்டுப்படுத்துவதற்கு, சிறந்த கால்நடை மருத்துவரை அணுகி முறையான தடுப்பூசிகளை காடைகளுக்கு போடலாம்.தரமான தீவனம் மற்றும் தண்ணீர் கொடுப்பதால், காடைகள் கணிசமான எடை மற்றும் வருவாய் கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: கே.பிரேமவல்லி, 97907 53594