உள்ளூர் செய்திகள்

நீரில் கரையும் வகையில் கூழ் வடிவ உரம் தயாரிப்பு

கூழ் வடிவ உரம் தயாரிப்பு குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், புரிசை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி எம்.தனஞ்செயன் கூறியதாவது:பாரம்பரிய ரக நெல், ரோஜா, காய்கறி ஆகியவை சாகுபடி செய்து வருகிறேன். இதுபோன்ற பயிர்களுக்கு, இயற்கை உரங்களை தயாரித்து, ஊட்டமாக கொடுத்து வருகிறேன்.அந்த வரிசையில், நீர் பாசனத்தில் கலக்கும் வகையில், கூழ் வடிவ உரம் தயாரித்து வருகிறேன். இதில், பஞ்ச காவ்யா, மீன் அமிலம், பல்வீக், யூமிக் ஆகிய பொருட்களை கலந்து, கூழ் வடிவில் உரம் தயாரித்து வருகிறேன். இது, ஒரு ஏக்கர் நெல் பயிருக்கு, ஒரு லிட்டர் கூழ் வடிவ உரமும், காய்கறி, வாழை உள்ளிட்ட பழ மரங்களுக்கு மூன்று லிட்டர் கூழ் வடிவ உரமும் போதுமானது. இந்த கூழ் வடிவ உரக்கலவை, நேரடி பாசனமாகவும், சொட்டு நீர் பாசனத்திலும் பாய்ச்சலாம்.இதுபோல செய்யும் போது, வழக்கமான மகசூலை காட்டிலும், கூடுதல் மகசூல் கிடைக்க வழி வகுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: எம்.தனஞ்செயன்,88257 46684.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !