பண்ணை குட்டைகளில் வண்ண மீன்கள் வளர்ப்பு
'விடோ டெட்ரா' ரக வண்ண மீன்கள் வளர்ப்பு குறித்து, திருவள்ளூர் மாவட்டம், ஆத்துார், காரனோடை பகுதியைச் சேர்ந்த மீன் வளர்க்கும் விவசாயி எஸ்.மணிகண்டன் கூறியதாவது:வண்ண மீன்கள் உற்பத்தி செய்யும் பண்ணை அமைத்து உள்ளேன். இது,உணவுக்கு வழங்கப்படும் மீன்களைக் காட்டிலும், கண்ணாடி தொட்டிகளில் வளர்க்கும் மீன் உற்பத்தி செய்வதற்கு, பாதுகாப்பு அவசியமாகிறது.குறிப்பாக, கோல்டு, கொய்கார்ப்பு, ஏஞ்சல், சக்கரைகேட், டேங்க் கிளினர் அந்த வரிசையில், விடோ டெட்ரா ரக புதிய வண்ண மீன்களை வளர்த்து வருகிறேன்.இது, ஆக்டோபாஸ், ஜெல்லி, அம்பர்லா ஆகிய ரக வண்ண மீன்களில் இருந்து உருவாக்கப்பட்ட நிறமாகும். இந்த ரக மீன்களுக்கு, தண்ணீர் மற்றும் நிலம் சரியான முறையில் இருக்க வேண்டும்.ஒரு ஏக்கரில், மூன்று பண்ணை குட்டைகள் அமைத்து, வண்ண மீன்களை உற்பத்தி செய்து விற்பனை செய்தால், ஒரு ஆண்டிற்கு, 1.50 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டலாம். ஒரு ஏக்கர் நெல்லில் கிடைக்கும் வருவாய் காட்டிலும், இரட்டிப்பு வருவாய் கிடைக்கிறது.வண்ண மீன் வளர்ப்பிற்கு, முறையாக பண்ணை அனுபவ பயிற்சி பெற்ற பின், மீன் வளர்ப்பில் ஈடுபட்டால், வருவாய் கூடுதலாக ஈட்டலாம்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: எஸ்.மணிகண்டன்,98413 50945.