முருங்கை மதிப்பு கூட்டுதல் ஆன்லைன் பயிற்சி
தஞ்சாவூரில் உள்ள தேசிய உணவுத்தொழில்நுட்பம் தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் (நிப்டெம்-டி) மே 10 காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை முருங்கை மதிப்பு கூட்டுதல் இலவச பயிற்சி ஆன்லைன் மூலம் அளிக்கப்படுகிறது.முருங்கை மதிப்பு கூட்டுதல் தொழிற்சாலை அமைப்பது, உணவு பாதுகாப்புத்துறை சான்றிதழ் பெறுவது, பேக்கிங், லேபிளிங் தொழில்நுட்பம், பி.எம்.எப்.எம்.இ., திட்டங்கள் குறித்து விளக்கப்படும். உணவுத்தொழில் நிபுணர்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவன பிரதிநிதிகள், மகளிர் சுயஉதவி குழுக்கள், கூட்டுறவுத்துறை மற்றும் மாணவர்கள் பங்கேற்கலாம். niftem-t.ac.in இணையதளத்தில் பயிற்சி என்ற பிரிவில் உள்ள இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.