உள்ளூர் செய்திகள்

சாயாத நெற்பயிருக்கு ஆந்திர 1156 ரக நெல்

ஆந்திரா 1156 ரக நெல் சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துார் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஆர்.தேவராஜ் கூறியதாவது:பலவித ரக நெல் சாகுபடி செய்து வருகிறேன். அந்த வரிசையில், -ஆந்திரா 1156 ரக நெல் முதல் முறையாக சாகுபடி செய்துள்ளேன். இது, 120 நாளில் மகசூலுக்கு வரும். இரண்டரை அடி உயரம் மட்டுமே வளரும் தன்மை உடையது. மழைக்காலத்திலும், நெற்கதிர்கள் நிலத்தில் சாயாது.ஏக்கருக்கு, 35 நெல் மூட்டைகள் மகசூலுக்கு கிடைக்கும் என, முன்னோடி விவசாயிகள் தெரிவித்து உள்ளனர். பாபட்லா ரக நெல்லில் இருந்து, ஒட்டு ரமாக மாற்றம் செய்யப்பட்ட புதிய ஆந்திரா ரகமாகும். நம்மூர் களிமண் நிலத்தில், சாகுபடி செய்துள்ளேன். நல்ல மகசூல் கிடைக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: ஆர்.தேவராஜ், 87547 97918.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !