உள்ளூர் செய்திகள்

மாடி தோட்டத்தில் சாகுபடியாகும் சைனிஷ் ஆரஞ்சு பழம்

சைனிஷ் ஆரஞ்சு சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், கரும்பூர் கிராமத்தைச் சேர்ந்த செடிகள் உற்பத்தி செய்யும் விவசாயி கே.சசிகலா கூறியதாவது:நம்மூர் கோடை வெயில் மற்றும் மழைக்கு ஏற்றவாறு, குளிர் மற்றும் வறட்சியான பிரதேசங்களில் விளையும், பல வித பழ மரங்களை சாகுபடி செய்யலாம்.சைனிஷ் ஆரஞ்சு பழத்தை மாடி தோட்டம் மற்றும் நிலங்களிலும் சாகுபடி செய்துள்ளேன். இது, நம்மூர் கோடை வெயில் மற்றும் மழை ஆகிய பருவ நிலைக்கு ஏற்ப தாங்கி வளர்கிறது.இந்த சைனிஷ் ஆரஞ்சு பழம், எலுமிச்சை பழத்தை காட்டிலும் சற்று பெரிய அளவில் இருக்கும். இது, மரத்தில் கொத்து கொத்தாக காய்க்கக்கூடிய தன்மை உடையது.மேலும், இரண்டு ஆண்டுகளுக்கு பின், மகசூல் எடுக்கும் போது, அனைத்து சீசன்களில் மகசூல் காண முடியும்.சைனிஷ் ஆரஞ்சு பழ மரத்தில், ஆண்டு முழுதும் மகசூல் கிடைப்பதால், வருவாய்க்கு பஞ்சம் இருக்காது.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: கே.சசிகலா,94455 31372.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !