உள்ளூர் செய்திகள்

பட்டமும் பயிரும் பழகலாம்

விவசாயத்தைப் பொறுத்தவரை பட்டம் என்பது காலநிலை சார்ந்தது. 'பட்டம் பார்க்காப் பயிர் பாழ்' எனும் பழமொழிக்கேற்ப பட்டத்திற்கு ஏற்றவாறு பயிரிடவில்லை எனில் போதிய அளவில் மகசூல் கிடைக்காது.எது சரியான பட்டம்பயிருக்கு உகந்த தட்பவெப்ப சூழ்நிலை, காற்றோட்டம் இருக்கும் போது அப்பயிர் அதிக மகசூல் கொடுக்கும். அதுவே அந்தப் பயிருக்கு உகந்த பட்டம் என்போம். உதாரணமாக நெல்லுக்கு ஏற்ற பருவம் சம்பா. நெல்லுக்குத் தேவையான அதிக தண்ணீர், வெயில் சம்பா பருவத்தில் கிடைப்பதால் தண்ணீர்த் தட்டுப்பாடு இல்லாத அனைத்து விவசாய நிலங்களிலும் நெல் பயிரிடப்படுகிறது. பயிரிடும் பட்டத்தை சம்பா, குறுவை, நவரை, கார், தாளடி, சொர்ணவாரி, முன் சம்பா, பின் சம்பா, சித்திரை, ஆடி, கார்த்திகை என பிரிக்கலாம்.பட்டமும் மாதமும்சித்திரை - ஆடி (ஏப்.15 - ஆக. 14) வரை சொர்ண வாரி. ஆடி - மார்கழி (ஜூலை 15 - ஜன. 14) வரை சம்பா பருவம். புரட்டாசி - தை (செப்.15 - பிப்.14) வரை பின்சம்பா அல்லது தாளடி. மார்கழி - மாசி (டிச.15 - மார்ச் 14) வரை நவரை. நடு வைகாசி - நடு ஆவணி (ஜூன் 1 - ஆக.31) வரை குறுவை. நடு சித்திரை - நடு ஆனி (மே 1 - ஜூலை 14) வரை கார். புரட்டாசி - கார்த்திகை (அக். - நவ.) வரை பின் தாளடி பருவமாக சொல்லலாம்.ஒரு பயிர் சாகுபடி செய்த நிலத்தில் தொடர்ந்து அதே பயிரைச் சாகுபடி செய்வதால் நிலத்தின் வளம் குறைவதோடு அடுத்த பயிரின் மகசூல் குறைய வாய்ப்புள்ளது. மாற்றுப் பயிர் சாகுபடி செய்யும்போது முந்தைய பயிர்களின் கழிவுகள் எருவாகப் பயன்படுவதோடு நோய்களும் எளிதில் தாக்காது.எந்தப் பட்டத்தில் என்ன பயிரிடலாம்ஜனவரியில் (மார்கழி, தை) கத்தரி, மிளகாய், தக்காளி, பாகற்காய், பூசணி, சுரைக்காய், முள்ளங்கி, கீரைவகைகள், வெங்காயம், அவரை, கொத்தவரை, கரும்பு பயிரிடலாம். பிப்ரவரியில் கத்தரி, மிளகாய், தக்காளி, பாகற்காய், வெண்டை, சுரைக்காய், கொத்தவரை, பீர்க்கங்காய், கோவைக்காய், கீரைவகைகள், அவரை, சூரியகாந்தி, உளுந்து, கம்பு, சோளம், கரும்பு, பருத்தி பயிரிடலாம். மார்ச்சில் கத்தரி, தக்காளி, பாகற்காய், வெண்டை, கொத்தவரை, பீர்க்கங்காய், கோவைக்காய், சூரியகாந்தி, உளுந்து, கம்பு, சோளம், பருத்தி சாகுபடி செய்யலாம். ஏப்ரலில் செடிமுருங்கை, கொத்தவரை, வெண்டை, பீர்க்கங்காய், பாகற்காய், அவரை, கம்பு, சோளம், எள், புடலை பயிரிடலாம்.மே மாதத்தில் வெங்காயம், அவரை, எள், சோளம், ஜூனில் பூசணி, வெண்டை, கீரைவகைகள், கொத்தவரை, தென்னை, ஜூலையில் புடலை, எள், உளுந்து, தென்னை, தட்டைப்பயறு, துவரை, மொச்சை, பாசிப்பயறு, ஆகஸ்டில் முள்ளங்கி, பீர்க்கங்காய், பருத்தி, செப்டம்பரில் அவரை, மிளகாய், நெல், பருத்தி, அக்டோபரில் செடிமுருங்கை, கத்தரி, முள்ளங்கி, வெங்காயம், கொத்தவரை, கொண்டைக்கடலை,நெல், பருத்தி சாகுபடி செய்யலாம்.நவம்பரில் கொண்டைக்கடலை, நெல், சோளம், தென்னை, கரும்பு, வாழை, மரவள்ளிக்கிழங்கு, டிசம்பரில் கத்தரி, தக்காளி, மிளகாய், முள்ளங்கி, கொண்டைக்கடலை, நெல், சோளம், தென்னை, வாழை, மரவள்ளி பயிரிடலாம்.பயிரிடும் விதை தரமானதாக இருந்தால் மட்டுமே பயிர் எண்ணிக்கை பராமரிக்கப்பட்டு அதிக மகசூல் கிடைக்கும். விதையின் தரத்தை பரிசோதிக்க அந்தந்த மாவட்டங்களில் செயல்படும் அரசு விதைப் பரிசோதனை நிலையத்தை அணுகலாம்.- மகாலெட்சுமி விதைப் பரிசோதனை அலுவலர் லயோலா அன்புக்கரசி சரஸ்வதி வேளாண் அலுவலர்கள் விதைப் பரிசோதனை நிலையம், சிவகங்கை 99422 71485


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !