டிப்ஸ்
ஆன்லைன் பயிற்சிகர்நாடகா பாகல்கோட் தோட்டக்கலை அறிவியல் பல்கலை, ஐ தராபாத் தேசிய விவசாய விரிவாக்க மேலாண்மை நிறுவனம் (மேனேஜ்) சார்பில் மே 27 முதல் 31 வரை உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான தேசிய அளவிலான வணிகவாய்ப்புகள் குறித்த ஆன்லைன் பயிற்சி அளிக்கப்படுகிறது. www.manage.gov.in இணையதளத்தில் பதிவு செய்யலாம்.மைக்ரோ க்ரீன் பயிற்சிபெரியகுளம் இ.டி.ஐ.ஐ. மையம், தோட்டக்கலை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் மே 25, 26 ல் காலை 11:00 முதல் மதியம் 12:00 மணி வரை மைக்ரோ க்ரீன் தயாரிப்பு குறித்து ஆன்லைன் பயிற்சி அளிக்கப்படுகிறது. கட்டணம் உண்டு. www.ediiphbif.orgல் பதிவு செய்யலாம்.புவிசார் குறியீடு பயிற்சிமதுரை விவசாய கல்லுாரி வளாகம் வேளாண் தொழில் முனைவோர் ஊக்குவிப்பு மையத்தில் புவிசார் குறியீடு மற்றும் புத்தொழில் முனைவோருக்கான கண்காட்சி மே 24 முதல் 26 வரை மதியம் 2:00 முதல் இரவு 10:00 மணி வரை நடக்கிறது. மத்திய அரசின் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனம், நபார்டு வங்கி, கோவை வேளாண் பல்கலை ஏற்பாடுகளை செய்துள்ளன.முருங்கை இலை விற்கலாம்காய்ந்த முருங்கை இலை அல்லது துாளாக ஆன்லைனில் விற்பதற்கு பாக்ரோ அக்ரி டெக்னாலஜிஸ் உதவுகிறது. முருங்கை விவசாயிகள் 88254 62942ல் தொடர்பு கொள்ளலாம்.