கோடையில் கோழிகளுக்கு தண்ணீர்... தண்ணீர்...
கால்நடைகளின் உடல் எடையில் 70 சதவீதம் தண்ணீரும் பாலில் 80 சதவீதம் தண்ணீரும் முக்கியப் பகுதி பொருட்ளாக உள்ளன. கால்நடைகளுக்கு குடிநீரும் உணவு தான். கோழிகளை பொறுத்த மட்டில் அவை தீவனம் இல்லாமல் கூட பல வாரங்கள். உயிர் வாழும். ஆனால் தண்ணீர் இல்லாமல் சில நாட்கள் கூட உயிர் வாழ முடியாது. வர்த்தக ரீதியாக வளர்க்கப்படும் இறைச்சிக் கோழிகளுக்கு அவை உட்கொள்ளும் தீவனத்தைப் போல சராசரியாக இரண்டு மடங்கு தண்ணீர் தேவைப்படுகிறது.கோடையில் கோழிகளின் உடல் வெப்பம் அவற்றின் மூச்சுக்காற்று மூலம் வெளியேறுகிறது. இதனை ஈடுகட்ட அதிகளவு துண்ணீர் தேவையாகிறது. முட்டைக் கோழிகளை பொறுத்தவரை அவை முட்டைகளை இட்டவுடன் நிறைய தண்ணீர் குடிக்கும். இரவில் விளக்கை அணைப்பதற்கு முன்னதாகவும், அதிக நீர் அருந்தும். இதற்கு நிறைய தண்ணீர் தேவைப்படுகிறது. கோழிகளுக்கு ரத்தக் கழிச்சல், சால்மனெல்லோசிஸ், கோவிபேசில்லோசிஸ் ஆகிய நோய்கள் தண்ணீரின் மூலமே பரவுகின்றன.எனவே குடிநீர் சுத்தமானதாக இருக்க வேண்டும். கோழிகளுக்கு வயது அதிகமாக அதிகமாக தண்ணீர் தேவையும் அதிகரித்து கொண்டு போகிறது. தண்ணீரில் ஐஸ்கட்டிகள் கலந்து கொடுத்தால் வெப்ப அயர்ச்சி போன்ற அசவுகரியங்களை தடுக்கலாம். உடலின் வெப்ப நிலையை சீராக வைத்திருப்பதற்கும், தண்ணீர் அவசியமாகிறது. கோழிகளின் தண்ணீர் தேவை பெரும்பாலும் குடிநீர் மூலமாகவே பூர்த்தி செய்யப்படுகிறது. சிறிதளவு தண்ணீர், அவை சாப்பிடும் தீவன வகைகளின் மூலம் நிறைவு செய்யப் படுகிறது. கோழிகளுக்கு வழங்கப்படும் தணணீரில் பூச்சிக்கொல்லி மருந்துகள், பெயின்ட் போன்ற ரசாயன பொருட்கள் கலந்து விடாமல் பார்த்து கொள்ள வேண்டும். தொடர்புக்கு 94864 69044.- டாக்டர்.வி.ராஜேந்திரன்முன்னாள் இணை இயக்குனர்கால்நடை பராமரிப்புத்துறை